எது உண்மையான நஷ்டம், லாபம்?

எது உண்மையான நஷ்டம், லாபம்?

உலகிலேயே அதிக பணக்காரர் யார் என்று தெரியுமா? வேறு யாருமல்ல ஆதாம் தான், ஆதாமுக்கு இல்லாதவைகளே இல்லை, உலகம் முழுவதுக்கும் சொந்தக்காரனாக இருந்தவர் ஆதாம். ஒரு உதாரணத்திற்கு சொல்லுகிறேன், சாத்தான், ஆதாமிடத்தில் உள்ள எல்லா சொத்துக்களையும்  திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்ன நடந்திருக்கும்? ஆதாம் நஷ்டப்பட்டிருப்பாரா?
இல்லை இல்லவே இல்லை.

இந்த உலகத்தில் "எது உண்மையான நஷ்டம்" என்பதை நாமறிந்திருக்கவேண்டும். உலகம் முழுமையையுமே சாத்தான் திருடியிருந்தாலும், அது நமக்கு நஷ்டமுமல்ல, சாத்தானுக்கு லாபமுமல்ல. ஆக எது நமக்கு உண்மையான நஷ்டம்?

என்னையும் என் தேவனையும் எது பிரிக்குமோ, அந்த பிரிவுதானே உண்மையான நஷ்டம், என் சொத்துக்கள் முழுவதும் சாத்தானால் கொள்ளையடிக்கப்பட்டாலும் இன்னமும் நான் தேவஉறவில் தானே இருக்கிறேன், இந்த சொத்துக்களைக் கொடுத்த என் தேவன் இன்னமும் என்னுடன் இருக்கிறாரே! கொடுத்தவரா? கொடுக்கப்பட்டவைகளா, எது முக்கியம்? ஆக சாத்தானுக்கு, நம்மிடம் எதை பறித்துக்கொள்ள்ள வேண்டும் என்பது, அவனுக்கு நன்கு தெரியும்.

இயேசு சொன்னார், “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன லாபம் உண்டு”. இந்த வசனம் அப்படியே ஆதாமுக்குப் பொறுந்தும்.

சாத்தான் ஆதாமின் எந்த சொத்துக்களையும் களவாடவில்லை, அது அவனுடைய நோக்கமும் இல்லை, ஆனால் ஆதாமுக்கும், தேவனுக்கும் இடையே இருந்த உறவை களவாடிவிட்டானே!

பிரியமானவர்களே சிந்தியுங்கள், இன்றைக்கு பல விசுவாசிகள், “சாத்தான் எங்கள் சொத்துக்களையும், உடமைகளையும் சேதப்படுத்த வருகிறான்”, என்று கதறுகிறார்கள், அதற்காகவே ஜெபிக்கிறவர்களாயுமிருக்கிறார்கள், ஆனால் சாத்தானுக்கு, நம்முடைய சொத்துக்கள் முக்கியமல்ல, நமக்கும் தேவனுக்கும் உள்ள “உறவே” முக்கியம்.

என்னில் இச்சையை, பொய்யை, காமவிகாரத்தை, பொறாமையை, கோபத்தை, எரிச்சலை, பொறுமையின்மையை, அவிசுவாசத்தை, இப்படி கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தை, நாம் செய்யவே சாத்தான் என்னிடத்தில் வருகிறான், அதுதான் அவனுக்கு லாபமும், நமக்கு நஷ்டமும் கூட....
எது உண்மையான நஷ்டம் என்று புரிகிறதா, கர்த்தரின் உறவை பாதிக்கும் எந்த செயலுக்கும் விலகியிருங்கள்,  கர்தருடைய உறவுக்கு பங்கமில்லாத எந்த நஷ்டத்துக்கும் கலங்கி கவலைப்படாதிருங்கள். (ரோமர் 8:35-39)

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post