சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.


நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் இடதுபுறம் என்பது கீழ்படியாத தன்மையாகவும் வலதுபுறம் என்பது நம்மை நாம் மிகைப்படுத்தியும் பெருமையின் தன்மையாகவும் இருக்கின்றது.

ஆகையால் ஒடும் ஒரு வண்டி வலதுபுறம் சாயும்போது , தடுப்பின் நிமித்தமாக அதே வண்டி தடுமாறி இடதுபுறமாகிய கீழ்படியாமையாலும் மேலும் ஓடமுடியாமல் நொறுங்கிப்போகிறது.

இப்பொழுது அங்கே ஒரு மெக்கானிக் அந்த வண்டியை சரி செய்து மீண்டும் வழியில் செல்ல உதவுகிறார்.மெக்கானிக் இங்கு மெக்கானிக் பரிசுத்த ஆவியானவர், வழி இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடி,வண்டி நாம்தான்.

வழியைப் பற்றிய மொத்த வரைபடம் நியாயப்பிரமாணம். வழியோரம் இருக்கும் அவ்வப்போது வழிகாட்டும் குறியீடுகள் அனைத்தும் ஜீவனின் பிரமாணம்.அந்த ஜீவனின் பிரமாணத்தின்படி நாம் ஒட அல்லது வண்டி பொறுமையோடு ஒடுவதற்கு கூடவே மெக்கானிக்காகவும்,பயிற்ச்சியாளராகவும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

வழியில் எப்படி நடக்க நியாயப்பிரமானம் மற்றும் கட்டளைகள் வரைபடமாக இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் உணர்த்தும் ஜீவனின் பிரமாணத்தின்படி நடக்கும்போது நியாயப்பிரமானத்தையும் ,கட்டளைகளை நிரைவேற்றுகிறவர்களாக இருப்போம்.
வண்டியில் பெட்ரோல் என்பது தேவனுடைய உண்ணத பெலன்.

வண்டியின் அனைத்து பாகங்களும் நம் ஐம்புலங்கள் அவை அனைத்தும் ஒருங்கினைத்த அமைப்பு ஒரு தேவாலயம் .இந்த ஐம்புலங்கள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருந்தாலும் அவை வண்டியின் உறுதித்தன்மை இல்லாததாக காணப்படும்.

ஆவியானவர் இல்லாமல் நாம் சுயமாக நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முயலும்போது மிகக்கடினமாக இருக்கும் காற்று இல்லாத டையர் எப்படி இறுக்கமாக இருக்குமோ அப்படியே ஆவியானவர் இல்லாதவன் சமாதானமும் சந்தோசம் இல்லாத கொள்கைக்காரனாக அன்பு இல்லாதவனாக இருப்பான்.

ஆகையால் நாம் பொறுமையோடு ஆவியானவருக்கு கீழ்படிந்து வாழும்போது ஜீவனின் பிரமாணத்தைக் கடைப்பிடித்து வாழ்கிறவர்களாகவும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவர்களாக காணப்படுவோம்.அல்லேலூயா.

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post