விழாதிருக்க ஆலோசனை!
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1 கொரி 10:12)
ஆவிக்குரிய வாழ்வில் *நிற்கிறேன்* என எண்ணிக்கொண்டு இருப்பவரும் விழ வாய்ப்புக்கள் உண்டு! ஆனால் பரிசுத்த வேதம், விழாமல் இருக்கவும், அழியாமல் இருக்கவும் முன்னமே ஆலோசனை வழங்குகிறது!
நீதிமான் ஏழுதரம் விழுவதற்கல்ல, எழுவதற்கே தேவன் விரும்புகிறார். எழமுடியாத விழுதல்களும் உண்டு! ஆனால், தேவகிருபையானது எழவிரும்புகிறவர்களுக்கு எப்போதும் உண்டு!
ஆவிக்குரிய தூக்கம் மட்டுமல்ல, ஆவிக்குரிய அறிவின்மையும் விழப்பண்ணும்! செழிப்புக்கான உபதேசங்களும், காணிக்கைக்கான நவநாகரீக திட்டங்களும் ஒரு விசுவாசியை தன்னிலை மறக்கவைத்து விழவைத்து, மெய்யான உபதேசம் எது என்றுகூட தெரியாத அளவுக்கு மயக்கத்தில் வைத்திருக்கும் என்பது எவ்வளவு உண்மை!!!
சாத்தானும் வேதம் ஓதக்கூடும், இனிப்பான உபதேசத்திலும் விழக்கூடும் என்பது தெரியுமா? கிறிஸ்து இயேசுவிடமே வேதவசனம் சொல்ல முயற்சித்தவன், மனிதரிடம் எவ்வளவாய் சொல்லி விழவைப்பான்?
உங்கள் சபை உபதேசங்களை சற்று சீர்தூக்கிப் பாருங்கள்!! கடிந்துகொள்ளுதலும், பரிசுத்தமும், நியாயத்தீர்ப்பும், கண்டித்து உணர்த்துதலும் இல்லாத உபதேசம் தேவனுடையதாக இருக்க வாய்ப்பில்லை!
கடிந்துகொள்ளுதல் கசக்கிறது என்றால், நீங்கள் விழுந்துகிடக்கிறவர்களே! வாக்குத்தத்தம் மட்டும் இனிக்கிறதென்றால் சற்று யோசிக்கவேண்டியதுதான்!
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். (சங்கீதம் 145:14)
ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் எழுவோம்! ஆமென்!
Post a Comment