Gethsemane - The Olive Press
கெத்சமனே - ஒலிவ எண்ணெய்ச் செக்கு
கலிலேயாக் கடலின் அருகே உள்ள கப்பர்நகூமில் ஒலிவ எண்ணெய்ச் செக்குகள் அநேகம் உள்ளன. இந்தச் செக்குகள் எரிமலைக் குழம்புகளால் உருவான கடினமான பாறைக் கற்களால் செய்யப்பட்ட வட்ட வடிவமான செக்கு. இதில் வட்டமாகப் பள்ளம் இருக்கும். இந்தப் பள்ளத்தில் உருளக்கூடிய வட்டக் கல் ஒன்று உள்ளே இடப்பட்டிருக்கும்.
இந்தப் பள்ளத்தில் ஒலிவக் காய்களைப்போட்டு அந்த வட்டக் கல்லைச் சுழலச் செய்வர். அப்போது காய்கள் நசுங்கி ஒலிவ எண்ணெய் வெளிவரும்.
ஆண்டவர் இயேசு தமது கடைசிப் பாஸ்கா உணவைச் சீடர்களுடன் பகிர்ந்து கொண்ட பின் ஒலிவ மலையில் இருக்கும் கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார்.
அத்தோட்டத்தில் ஆண்டவர் மிகுந்த வியாகுலத்துடன் மன்றாடினார். Maundy Thursday என்கிற சொல்லில் Maundy என்பதன் பொருள் " வியாகுலம் " என்பதாகும். ஆம் அந்த ஒலிவ எண்ணெய்ச் செக்குகளில் ஒலிவக் காய்கள் நசுக்கப்பட்டுப் பிழியப்படுவதுபோல் ஆண்டவரும் நமக்காக நசுக்கப்பட்டுப் பிழியப்பட்டார். அவருடைய வியர்வை இரத்த வியர்வையாக வந்தது.
" நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,
நம்முடைய அக்கிரமங்கினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்,
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.
அவருடைய தழும்புகளால் குணமாகுகிறோம் ".
இந்நாளைக் நாம் " பெரிய வியாழன் " என்று அழைக்காமல்,
" வியாகுல வியாழன் " என்பதே சாலச் சிறந்ததாகும்.
*இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள் ( எபி 12-1-3)→*
1) வியாகுலம் அடைந்தார் - லூக் 22-42-44
2) தலையில் காயம் அடைந்தார் - மத் 27-29,30
3) வாரினால் அடிக்கபட்டார் - யோ 19-1-3
4) கைகள், கால்களில் ஆணி அடிக்கபட்டார் - சங் 22-16
5) விலாவில் குத்தினார்கள் - யோ 19-34
6) முகத்தில் துப்பினார்கள் - மாற்கு 15-19
7) பரியாசம் பண்ணினார் கள் - மாற்கு 15-20
8) குடிக்க காடியை கொடுத்தார்கள் - யோ 19-29,30
Post a Comment