மரணமே உன் கூர் எங்கே?
அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். - (மத்தேயு 28: 6).
இயேசுகிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் பாதாளத்தையும் வென்று சிலுவையிலே வெற்றிசிறந்தார். சாத்தான் அங்கு தோற்று போனான். நான் பிழைக்கப்படுகிறதினால் நீங்களும் பிழைப்பீர்கள். - (யோவான் 14:19) என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் உயிரோடு இருப்;பதால் நாமும் பிழைக்கிறோம். நாமும் வாழ்கிறோம். அவர் உயிரோடு எழுந்தரிக்கவில்லை என்றால் கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்களுடைய நம்பிக்கையும், நாம் அவர்களை காண்போம் என்ற நம்பிக்கையும் விருதாவாயிருக்கும். இப்போது நாம் நமக்கு பிரியமானவர்களை மீண்டும் சந்திப்போம் என்ற விசுவாசத்தோடு நாம் ஒருவரையொருவர் தேற்றுகிறோம். கிறிஸ்து எழுந்தரிக்காவிட்டால் நம்முடைய நம்பிக்கை வீணாயிருக்குமே.
அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்ற வார்த்தைகள் நிச்சயமும் சத்தியமுமாயிருக்கிறது. நம்முடைய கர்த்தர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார். ஆகவே நமக்கும் மரணத்தை கண்டு பயமில்லை. இயேசு ஜெயமெடுத்தபடியால் நாமும் ஜெயமெடுப்போம். ஆமென்.
Post a Comment