சந்தோஷப்படுத்துங்கள்


சந்தோஷப்படுத்துங்கள் (2 கொரி. 1:24)

தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் சந்தோஷமாயிருப்பது மாத்திரமல்ல நீங்கள் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும். லூக்கா 15ஆம் அதிகாரத்தில் பன்னிரண்டு முறை சந்தோஷம் என்ற வார்த்தை வருகிறது. அதில் மூன்று இடத்தில் நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்.

1. பரலோகத்தை சந்தோஷப்படுத்துங்கள் (லூக். 15:7).

உங்கள் மூலம் ஒரு புதிய ஆத்துமா கர்த்தரை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி இரட்சிக்கப்படுவாரானால் நீங்கள் பரலோகத்தை சந்தோஷப்படுத்துகிறீர்கள் என்று நம் ஆண்டவர் கூறுகிறார். ஏனென்றால் மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்திலே மிகுந்த சந்தோம் உண்டாயிருக்கிறது (லூக். 15:7).

புதிய ஆத்துமாவை நாம் இரட்சிப்புக்குள் நடத்துவது எப்படி?

நீங்கள் பாவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் (லூக். 15:2). நீங்கள் பாவிகளோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் (லூக். 15:2). பாவிகளை தேடிச் சென்று நீங்கள் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் (லூக். 15:4-5).

2. தேவ தூதர்களை சந்தோஷப்படுத்துங்கள் (லூக். 15:10)

நீங்கள் கர்த்தருடைய வருகைக்கு தகுதியுள்ள பரிசுத்தமான மணவாட்டியாய் ஆயத்தப்படும் போது தேவதூதர்கள் மத்தியில் சந்தோஷம் உண்டாகிறது. யூதர்களின் திருமணத்தில் மணவாட்டியின் நெற்றியில் அவளை திருமணம் செய்யப்போகும் மணவாளன் பத்துவெள்ளிக்காசுள்ள மாலையை மணவாளன் அணிவித்துச் செல்லுவான். அவளை திருமணம் செய்ய திரும்பி வரும் போது பத்து வெள்ளிக்காசும் இருக்கிறதா? என்று எண்ணிப் பார்ப்பார். அதில் ஒன்று தொலைந்து போனாலும் அவளுக்குத் திருமணம் நடக்காது.

எனவே தான் பத்து வெள்ளிக்காசில் ஒன்று தொலைந்த போது முதலாவது அவள் விளக்கை கொளுத்தினாள் (அதாவது அவள் அபிஷேகத்தில் நிறைந்தாள்). பின்பு வீட்டை பெருக்கினாள் (தன் பரிசுத்த ஜீவியத்தை ஆராய்ந்து பார்த்தாள்). ஜாக்கிரதையாய் தேடினாள். கானாமல் போன வெள்ளிக்காசை கண்டுபிடித்தாள். அதினிமித்தம் தேவதூதர்கள் மத்தியிலே சந்தோஷம் உண்டாயிற்று.

3.  உங்கள் பிதாவை சந்தோஷப்படுத்துங்கள் (லூக். 15:23, லூக். 15:32).

அப்பா வீட்டை விட்டு சிற்றின்பத்தைத் தேடி ஓடிப்போன இளையக்குமாரனாகிய பின்மாற்றக்காரரை தேடிக் கண்டுபிடித்து நம் சபைக்குக் கொண்டு வாருங்கள். பின்மாற்றக்காரன் உயிர்ப்பிக்கப்படும் போது நீங்கள் நம் பிதாவை சந்தோஷப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் உங்கள் அப்பாவை சந்தோஷப்படுத்துகிறீர்களா?

 உங்கள் சிநேகிதரை  சந்தோஷப்படுத்துகிறீர்களா? (லூக். 15:58).

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post