இரண்டு வித ஊழியர்கள்
1. அழைப்பை நிறைவேற்றும் ஊழியர் (எபி. 5:4).
2. பிழைப்பில் கவனம் செலுத்தும் ஊழியர் (2 தீமோ. 2:4).
தேவனவது ஊழியக்காரன், தேவன் அழைத்த அழைப்பின்படியே தேவனது ஊழியத்தைச் செய்ய வேண்டும். தேவனது ஊழியம் தவிர வேற எந்த வேளையிலும் தனது மனதையோ, தனது கவனத்தையோ, தனது நேரத்தையோ திருப்பக்கூடாது. ஊழியக்காரன் தனது அழைப்பை நிறைவேற்றவே ஊழியம் செய்ய வேண்டும். பிழைப்புக்கான அலுவல்களில் சிக்கக்கூடாது என்பது கர்த்தரின் கண்டிப்பான கட்டளை.
பழைய ஏற்பாட்டு ஊழியக்காரனின் வேலை என்ன? (உபா. 10:8)
1. கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சுமப்பது – ஜெபம், வேத தியானம் ஆகியவை.
2. கர்த்தருக்கு ஆராதனை செய்வது – சபையின் ஆராதனையை பொறுப்புடன் நடத்துவது.
3. கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு ஜனத்தை ஆசீர்வதிப்பது – குணமாக்கும் ஊழியம்.
இந்த மூன்று வேலைகளை மட்டும் செய்கிறவர் தேவன் கொடுத்த அழைப்பை நிறைவேற்றுகிறவர். மற்ற எந்த பொறுப்புகளிலும் தன் கவனத்தை சிதறவிடுவாரானால் அவர் பிழைப்பில் கவனம் செலுத்தும் ஊழியர் என்று கடிந்து கொள்ளுகிறார்.
புதிய ஏற்பாட்டு ஊழியக்காரனின் வேலை என்ன? (அப். 6:4)
1. ஜெப ஊழியம்
2. தேவ வசனத்தை போதிக்கிற ஊழியம்
3. குணமாக்கும் ஊழியம் (அப். 3:6).
இந்த மூன்று ஊழியங்களைத் தவிர வேறு எந்த பொறுப்புகளிலும் அப்போஸ்தலர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடவில்லை. பந்திவிசாரனை செய்வது எங்களுக்கு தகுதியல்ல (அப். 6:2). மேலே சொன்ன மூன்று ஊழியங்கள் தவிர வேறு எந்த சமூக சேவையிலும் தலையிடமாட்டோம் என்பதுதான் அப்போஸ்தலர்களின் பிரதிஷ்டை. நாம் எப்படிப்பட்ட ஊழியர்களாக ஊழியம் செய்கிறோம்?
நாம் அழைப்பை நிறைவேற்றும் ஊழியரா?
நாம் பிழைப்பில் கவனம் செலுத்தும் ஊழியரா?
Post a Comment