அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.



பழத்தை திண்றால் மரணம் நேரிடும் என்றபோது மனிதன் நம்பவில்லை

ஜலப்பிரளயம் வரப்போகிறது  பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை

பட்டணம் அழியப்போகிறது திரும்பிப்பாா்காதே என்ற போது லோத்தின்மனைவி நம்பவில்லை.

தலைப்பிள்ளை சங்காரம் வருகிறத என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை

கானானியர்களை வெல்ல  நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப்சென்ன போது ஜனங்கள் நம்பவில்லை

மேசியா பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை

அவர் மீண்டும் வருவார் என்றபோதும் ஜனங்கள் இன்னும் அவரைநம்பவில்லை

ஆனால் அவரது

வார்த்தைகளை  அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு

அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை இனி தோற்பதும் இல்லை

என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பிவருவார்

பூமியிலுள்ளயாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.

அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post