உணர்த்தும் தேவன்
ஒவ்வொறு ஞாயிறு காலை 6 மணிக்கெல்லாம், வெளுத்து போன ஜீன்ஸ் பேன்ட்டும் பழைய டீ ஷர்டும் சாதாரண செருப்பும் போட்டவாறு,
ஒரு பெண்,ஆலயத்தில் உள்ள எல்லா நாற்காலிகளையும் துடைத்து,மேடையில் உள்ள பூக்களை எல்லாம் சரி செய்து கொண்டிருந்தார்...இவர் கடந்த 6 வருடங்களாக ஒரு வாரம் கூட தவறாமல் இதை செய்து கொண்டிருக்கின்றார்ஒரு நாள் அந்த ஆலயத்திற்கு தன்னுடைய பென்ஸ் காரில்,சிறந்த உடை அணிந்த வாலிபர் ஒருவர் சற்று சீக்கிரமாகவே வந்திருந்தார்...ஒரு நாற்காலியில் அமர்ந்துஇந்த பெண் ஆலயத்தில் செய்யும் வேலையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்...பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்இந்தப் பெண்...பழைய ஆடை அணிந்து,தலைக்கு முக்காடிட்டு, எத்தனை அருமையாக, உண்மையாய் கர்த்தருக்காக செய்கிறார் என்று வியந்தவராய்...
பாவம்...இவர் ஒரு வேளை பள்ளி படிப்பை கூட தொடர முடியாமல் கூலி வேலை செய்து கஷ்டப்படுகிறவராக இருக்கலாம்என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்...ஒரு வேளை இவரை பார்க்கவும்,இவருக்கு உதவி செய்யவே என்னை இத்தனை சீக்கிரம் கர்த்தர் இங்கு அழைத்து வந்தாரோ என்று யோசித்தவராக தன்னுடைய பென்ஸ் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்...காருக்குச் சென்று இரண்டு $50 நோட்டுக்களை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி நடக்க ஆரம்பித்தார், அந்த பெண்ணும் தன்னுடைய வேலையை முழுமையாக முடித்து வீட்டிற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்...இவர் நேரே அந்த பெண்ணிடம் சென்று அவர் செய்யும் இந்த வேலையை வெகுவாக பாராட்டிவிட்டு, அவருக்கு தான் கொண்டு வந்த $100 கொடுக்க முயன்றார். அவரும் மிகவும் மரியாதையோடு அதை வாங்க மறுத்தார்,
பின்னர் இவர் அதை அந்த பெண்ணின் கையில் திணிக்க முயன்றார்... ஆனாலும்அதை வாங்க மறுத்து நடக்க ஆரம்பித்தார்...இவரோ அவரை விடுவதாக இல்லை, தொடர்ந்து ...கர்த்தர் உங்களுக்கு உதவி செய்யவே என்னை இத்தனை சீக்கிரம் அனுப்பியதாக உணர்ந்தேன்,தயவு செய்துஇதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினான், மீண்டும் அவர் வேண்டாம் என்று சொல்ல...சரி வாருங்கள் உங்களை என்னுடைய காரில் உங்கள் வீட்டிற்க்கு அழைத்துச் செல்கிறேன்,நீங்கள் நேரத்தோடு வீட்டிற்கு வந்து விடலாம் என்ற போது...மிக்க நன்றி,நான் என்னுடைய காரிலேயே செல்கிறேன் என்று கூறி தன்னுடைய காரை நோக்கிச் சென்றார்...அந்த பெண் ஒரு புதிய BMW காரில் வந்திருந்தார்...அதை பார்த்த உடன் தன்னுடைய பென்ஸ் கார் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவராய் வாயடைத்து நின்றார்...காரில் ஏறிய அந்த பெண் தன்னுடைய விசிடிங் கார்டை இவரிடம் கொடுத்தார்...திகைத்து நின்ற இவர் அந்த கார்டை கண்டவுடன் அதிர்ந்து போனார்,அந்த நகரத்தின் முக்கியப் புள்ளிகளில் இவரும் ஒருவர்...!!!!
ஆம்...அந்த பெண்மணி காரில் அமர்ந்த படி இவரை பார்த்து... "கர்த்தர் என்னுடைய நிலையை மாற்ற உங்களை அனுப்பவில்லை,ஒரு வேளைநீங்கள் தாழ்மையை கற்றுக் கொள்ள உங்களை அனுப்பி இருப்பார்..."என்று சொல்லி விட்டு தன் காரில் சென்று விட்டார்...
ஆம்,கர்த்தர் அந்த சகோதரனை சீக்கிரம் அழைத்து வந்தது,அவர் உணர்வடைவதற்காகவே...அவரும் உணர்ந்தவராய்தன் தவறுக்காக வருந்தினார்...அடுத்த வாரத்தில் இருந்துஅந்த சகோதரியோடு சேர்ந்து ஒவ்வொரு வாரமும்அதி காலையில் வந்து ஆலயத்தை சுத்தம் செய்து வருகின்றார்...
எனக்கருமையான சகோதரனே, சகோதரியே...நாமும் இந்த சகோதரனை போல, கர்த்தர் என்னைக் கொண்டு அடுத்தவர்களுக்கு உதவி செய்வார், என்னைக் கொண்டு போதிப்பார், என்னைக் கொண்டு பெரிய காரியங்கள் செய்வார்...நான் வளர்ந்தவன் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றோமா ???நம்மை ஆராய்ந்து பார்போம்...
ஒவ்வொறு நாளும் ஐயா !!!இன்று என்னை எப்படி நடத்த சித்தமாய் இருக்கின்றீர், என்னை முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்கின்றேன் என்னை நடத்தும் என்று கெஞ்சுவோமா ???ஆமென்
Post a Comment