நித்திய மரணமா? அல்லது ஜீவனா எது வேண்டும் உனக்கு?

நித்திய மரணமா??? அல்லது ஜீவனா எது வேண்டும் உனக்கு???

மரணம் அல்லது கிருபை வாழ்வு எதையாவது ஒன்றை நீ தேர்ந்தெடுத்தாகவேண்டும் இதில் எதை தேர்ந்தெடுப்பாய்?
மனிதன் தன் வாழ்நாளை ஒவ்வொரு நாளும் வீனாக்கிக்கொண்டு வருகிறான்.

இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல்..
பாவ சிற்றின்ப வாழ்வை இச்சித்து அதை அடைய ஆசையாக தொடர்கிறான்

அவன் மாம்சம் அதை எப்படியாவது அடையவேண்டும் என்று வெறிகொண்டு இருக்கிறது.
அவன் எவ்வளவு இச்சையின்படி வாழ்ந்தாலும் அவன் மாம்சம் திருப்தியாகவில்லை!

தேவ பிள்ளையே ஒரு நாள் நீ பாவத்தை அறிக்கையிட்டு அழுதுப் புலம்பி தேவனிடத்தில் மன்னிப்பு பெற்றாய்!
ஆனால் இன்றய நிலை எப்படி இருக்கிறது?

நீ உன் சுய  பெலத்தால் தேவனுக்கு பிரியமாக வாழமுயற்சி செய்து தீர்மானம் பல எடுத்தாய் எப்போதெல்லாம் உன் மாம்ச இச்சையை உன் பெலத்தால் அடக்கி வாழும்போது உன் மனது ஆறுதல் பெற்றது ஆனால் சில நாட்களில் அடக்கிவைத்த இச்சை மிக கடுமையாக உன்னோடு போராடி உன்னை ஜெயித்துவிடுகிறதே!
உன்னால் பரிசுத்தமான வாழ்வை தொடரமுடியவில்லையே என்று அங்கலாய்க்கிறாயா? அல்லது இனி என்னால் முடியாது என்று பாவ வாழ்வில் நிலைத்து சமாதானமில்லாமல் தொடர்கிறாயா?

உன் சரீரம் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நாளும் குறைந்துக்கொண்டே வருகிறது.
தேவ பிள்ளையே நாளை நான் மனந்திரும்புவேன் என்று தள்ளிப்போடுகிறாயா?

எல்லோர் மத்தியில் உன்னை பரிசுத்தவானாக காட்டிக்கொள்ளலாம் ஆனால் நித்தியம் உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறதே!

நீ கிரியையினால் பரிசுத்தமாக இருக்கிறேன் என்று உன் சுயநீதி உன்னை சாந்தப்படுத்தி உன் மனசாட்சியை மழுங்கடித்து உன்னை குருட்டாட்டத்தில் நிலைத்திருக்கச்செய்திருப்பதை இந்த வேளையில் உணர்ந்து மனந்திரும்பு!
நீ செய்த பாவம் உன்னை மரணத்தை நோக்கி இழுக்கிறது நீ மரித்தால் உன் நித்தியம் எங்கே?

ஒருவேளை  நீ மரித்து உன் ஆவி உன் சரீரத்தில் இருந்து பிரிந்து அந்த சரீரத்தைப் பார்க்கும்
ஓ தேவனே ஒரே ஒரு நிமிடம் இந்த சரீரத்துக்குள் அனும்பும் நான் என் பாவத்தை அறிக்கை செய்து உம்மிடத்தில் மனந்திரும்புவேன்* என்று கதறும்.

ஆனால் முடியாதே! இந்த நிலை உனக்கு வேண்டாம் என் சகோதரியே சகோதரனே! நாள் உனக்கு குறைந்துக்கொண்டே இருக்கிறதை அறிந்து மனந்திரும்பு.
பாவத்தில் நிலைத்திருக்கும் என் பிள்ளையே!

நீ என்னிடத்தில் திரும்பு என்று உன் அருகில் நிற்பதைப் பார்!
மாய்மாலமான வாழ்கை வேண்டாம்,பாவ வாழ்வு இனி வேண்டாம்

நீ என்னிடத்தில் சரணடைந்து அழுது என்னால் முடியவில்லை என்று உண்மையாக புலம்புவியானால் இதோ என் கிருபையை உனக்கு தந்து பாவம் செய்ய மனமே இல்லாத சுபாவத்தை நான் உனக்கு தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பாவியாக நீ மரித்தால் நீ எங்கே போவாய்! என்று உனக்கு தெரியும்

அங்கே நீ காணும் நிலையைக் கண்டு அப்பா ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் என் சரீரத்துக்குள் போகவேண்டும் என்று கதறும் .

ஒருமுறை உனக்கு வாய்ப்பு தந்தாகிவிட்டது நீயோ எல்லா நாளும் உன் சுய இஸ்டப்படி நடந்துவிட்டாய்!

இனி வாய்ப்பு கிடைக்காது ,சரீரத்தை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் ....
அந்த நரகத்தில் அநேக வேதனை இருந்தாலும் உன் சுயம் உன்னை மிகவும் வேதனைப்படுத்தும் உனக்கு எத்தனை வாய்ப்புகள் கிடைத்தது நீ அதை அசட்டை செய்தாயே என்று தன்னைத்தானே நொந்துக்கொள்ளும்.
நீ பிறந்து. மரிக்கும் நாள் வரையும் நடந்த பாவஎண்ணங்கள் ,லைவ்வாக எல்லாம் தெரியும் யூகா யுகாமாக அவைகள் தெரிந்துக்கொண்டே இருக்கும்.
உனக்கு கொடுத்த வாய்ப்புகளை லைவ்வாக பார்ப்பாய்!
மன்னிப்பு கேட்க உனக்கு கொடுத்த வாய்ப்புகளை நீ லைவ்வாக பார்ப்பாய் அதுவே மிகவும் உன்னை அனு அனுவாக கொல்லும்.

நீ பாவம் செய்ததால் உன்னைத் தண்டிக்கமாட்டார்.நீ ஆதாமுலமாகவே பாவியாக இருக்கிறாய் ஆனால் தேவன் உனக்காக ஜீவனைக்கொடுத்து உன் தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு உன்னை இரட்சிக்க அவர் தன் இரத்தத்தை சிந்தி மனுசா நீ பாவியாக இருந்தாய் உனக்காக நான் பலியானேன் என்று நீ விசுவாசி என்றுக் கூறியும் அதை நம்பாததால் உனக்கு தேவ தண்டனை!

இதை எண்ணி எண்ணி நீ அழுவாய்!
நரகத்தில் எல்லா உணர்வுகள்,சிந்தைகள் எல்லாம் இருக்கும் அவைகள் கடந்துப்போன சரீர வாழ்வை நினைப்பூட்டி உன்னை வேதனைப்படுத்தும் .

தேவன் உன்னிடம் என் மகனே என் மகளே உனக்காக என் இரத்தத்தை சிந்தினேனே இங்கு வந்து சேர்ந்துவிட்டாயே என்று உன்னைப் பார்த்து கதறி அழுவார்.

நீ ஐயோ தேவனே என்னைக் காப்பாற்றும் என்றுப் புலம்புவாய் தேவன் உன்னிடம் நேரம் கடந்துவிட்டது இனி முடியாது என்பார்.

மனுசா இப்போதே உனக்கு கிடைத்த இந்த சரீர வாழ்வில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மனந்திரும்பி கிருபையை பற்றிக்கொள் ,நாளை உன்னுடைய நாள் இல்லை இன்றே மனந்திரும்பு.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post