யார் சீஷன்? யாருக்கு சீஷன் ?

யார் சீஷன்? யாருக்கு சீஷன் ?

குரு இல்லாமல் சீஷன் இருக்கமுடியாது. இப்பொழுது கேள்வியே யார் குரு என்பது?பரிசுத்த வேதாகமம் சொல்கிறது " இயேசு கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறரர்" பின்பற்றுவதற்கு  ஒரே முன்மாதிரி நமக்கு கிறிஸ்து ஒருவரே .

இயேசு  நானும் வழிதான் என்று சொல்லவில்லை. நானே வழி என்றார்!
நானே சத்தியம் என்றார்!
நானே ஜீவன் என்றார்! யோவான் 14 : 6
இந்த குருவாகிய இயேசுவை   ஏற்றுக்கொள்ளாமல், அவரை பின்பற்றாமல் இரட்சிப்போ, பரலோகமோ இல்லை.

 யார் சீஷன் ?
குருவை பின்பற்றுகிறவன் சீஷன்.

இயேசு சொல்கிறார் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி ......நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி....என்றார்.

நாம் விசுவாசிகளா ?நாம் சீஷர்களா?

நாம் கிறிஸ்துவை பின்பற்றும் பொழுதுதான் சீஷனாகிறோம்.
இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது நமக்கு மட்டுதான் தெரியும்.

சீஷன் குருவை பின்பற்றுகிறவன்.
நாம் ஒருவருக்கு மட்டுமே சீஷனாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

யார் சீஷனாயிருக்கமாட்டான் என்று இயேசு கிறிஸ்து சொல்வதை சிந்திப்போம்

"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் . லூக்கா 14:26

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் . லூக்கா 14:27

" அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் . லூக்கா 14:33

இந்த மூன்று வசனங்களை தியானிக்கும்போது புரிகிறதா இயேசு கிறிஸ்து எப்படி பட்ட சீஷனை எதிர்பார்க்கிறார்......

குருவை போலவே சீஷர்களை உருவாக்க கட்டளை கொடுத்து சென்றார்!

 யார் என்னுடைய சீஷர்கள் என்று இயேசு சொல்வதை
 சிந்திப்போம்

"இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள் , யோவான் 8:31

" நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
யோவான் 13:34
" நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் , அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
யோவான் 13:35

" நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15:8

இந்த வசனங்களை நாம் வெறுமென படித்து கடந்து போகமுடியாது.
இன்று சொந்த வாழ்க்கையில்,  கிறிஸ்தவ வாழ்க்கையில், சபைவாழ்கையில் நம்முடைய நிலை சீஷனா?

கிறிஸ்தவ வாழ்க்கை குளிராகவும் , அனலாகவும். இருக்கமுடியாது

 பாகாலையும்* கர்த்தரையு பின்பற்றமுடியாது

 இரண்டு எஜமானை சேவிக்கமுடியாது.

....பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் - 2 கொரி 7 : 1 b
" நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே!

நன்றியுள்ளவர்களாயிருப்போம் தேவனுக்கு முன்பாக!

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post