ஜெப ஜீவியம்

நாம் ஆலய ஆராதனையில் பங்கெடுப்பது குறித்தோ, வைராக்கியமாய் ஊழியம் செய்வதை குறித்தோ சாத்தான் கவலைப்பட மாட்டான்.

ஆனால்

நாம் எந்த அளவு ஜெபத்தில் கவனமாயிருக்கிறோம் என்பதை பார்த்தால் சாத்தான் கலங்கி விடுவான்.

சாத்தானுடைய அம்புகள் ஜெபத்தை தான் குறி வைக்கின்றன.

நாம் ஜெபிக்காமல், ஊழியம் செய்யலாம்,
ஜெப ஜீவியம் இல்லாதவர்கள் தேவனை ஆரவாரமாய் ஆராதிக்கலாம்.

தேவனோடு ஜெபத்தின மூலம் நெருங்கிய உறவு
வைத்திராமல் நாம் செய்யும் அனைத்தும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்தவன் பிசாசானவன்.

எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக ஜெபத்தையே குறி வைக்கிறான்.

ஜெபத்தை தடுப்பதற்கே எல்லாவிதத்திலும் முயற்சி செய்வான்.

 அந்த ஜெபத்தை தடுத்து விட்டால்,

 எல்லாவித பாவத்தையும் உட்புகுத்தி விடலாம், மனசாட்சியை மழுங்க செய்து இதயத்தை உணர்வற்றதாக்கி விடுவதுதான் பிசாசானவனின் நோக்கம்.

'ஜெபமே முக்கியம்' ஜெபமே ஜெயம்' ஜெபமே பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்கும்' என்றெல்லாம் சொல்கிறோம், பாடுகிறோம்

 நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவ ஒழுங்கிற்காகவோ, கடமைக்காகவோ செய்யலாம்.

அதாவது

ஜெபம் வெறும் வார்த்தைகளாய் இராமல் இருதயத்தின் ஏக்கமாய் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஜெபம் உயிருள்ளதாகவும், சிறுபாவம் இருதயத்தில் நுழைந்தாலும் அதை உணர்த்துவதாகவும், தேவனோடுள்ள உறவை கட்டி எழுப்புவதாகவும் இருக்கும்


தனி ஜெபமே ஒருவனை தேவ உறவில் வளரசெய்து பாவத்தை சுட்டிகாட்டி கண்ணிகளில் விழாமல் சோதனைக்கு தப்பிக்க வழிவகுக்கும்.

 ஜெபமே நமது உயிர் மூச்சாக இருக்கட்டும், ஜெபமே நம் ஜீவனாக மாறட்டும்.
ஆமென்
அல்லேலூயா

கிறிஸ்துவின் அன்பு நமக்குள் இருப்பதால் தான் நாம் இன்னும் தேவ அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொடுக்கின்றோம்..

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post