மூன்று மரங்களும் அதின் ஆசைகளும்

ஒரு ஊரில் மூன்று மரங்கள் இருந்தன. அந்த மூன்று மரங்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருந்தன.

முதல் மரம் தான் பொக்கிஷம் வைக்கும் பெட்டியாக மாறவேண்டும் என்று நினைத்தது.

இரண்டாவது மரம் தான் கப்பலாக மாற வேண்டும் என்று நினைத்தது.

மூன்றாவது மரம் வானத்தை நோக்கி உயர உயர வளரவேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் மூன்று மரங்களையும் வெட்டினார்கள்.

முதல் மரத்தை வைக்கோல் போடும் பெட்டியாக செய்தார்கள். இரண்டாவது மரத்தை படகு செய்ய பயன்படுத்தினார்கள். மூன்றாவது மரத்தை குற்றவாளிகளை கொலை செய்யும் சிலுவையாக படைத்தார்கள்

மூன்று மரங்களும் மிகவும் வருத்தப்பட்டனர். நாம் எவ்வளவு மேலான குறிக்கோள்களை வைத்திருந்தோம் இப்பொழுது இவ்வளவு கீழான நிலைக்கு வந்துவிட்டோம் என்று கவலைப்பட்டன.

ஆனால், என்ன நடந்தது தெரியுமா? வைக்கோல் போட பயன்படுத்தப்பட்ட மரத்தில் இயேசுவை குழந்தையாக கிடத்தினார்கள்.

படகாக மாறிய மரத்தில் இயேசு ஏறி, காற்றையும், கடலையும் அதட்டி அற்புதங்களைச் செய்தார்.

மூன்றாவது மரத்தில் செய்யப்பட்ட சிலுவையில் தான் இயேசு கிறிஸ்து மரித்தார்.

மூன்று மரங்களும் இயேசு கிறிஸ்துவின் பரிசம் தங்கள் மேல் பட்டதை நினைத்து, மகிழ்ந்து சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

நாமும் எதிர்காலத்துல நமக்கு என்ன நடக்கும்னு தெரியாம இப்போ நடக்கும் ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம நெனச்சது ஒன்னு நடக்கிறது ஒன்னு என்று நினைத்து அங்கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமக்கு எது நல்லது என்று நம்மை விட இயேசுவுக்கு அதிகமாக தெரியும். ஒரு தாயை விட அவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார்.

அதனால், சில காரியங்கள் நமக்கு இப்போ கஷ்டமாக தெரியலாம், ஆனால் அதிலும் நன்மை இருக்கும்.

அந்த மரங்கள் தங்கள் ஆசை பட்டதை விட அதிகமான நன்மை அடைந்தததை போல, நாமும் தேவனிடத்திலிருந்து நினைத்ததை விட, கேட்டதை விட அதிக நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளுவோம். என்ற நம்பிக்கையுடன் பொறுமையாய் காத்திருப்போம். ஆமென்.

I_பேதுரு 5:6

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post