மனந்திரும்பமாட்டாயா?




உலகத்தின் வேஷம் களைந்து முடிவு உண்டானால்...எவ்வளவு நல்லதாக இருக்கும்.

ஒருவன் மேட்டிமையில் அதட்டுகிறான்.

இன்னொருவன் தன் வறுமையில் கெஞ்சுகிறான்.

உலக கல்வி கற்றவன் கல்லாதவனை மட்டம்தட்டுகிறான்.

கல்லாதவனோ அறியாமையின் நிமித்தமாக

உதவிக்காக கெஞ்சுகிறான்.

மனிதனின் மனம் எப்படியாக இருக்கிறது?

அதனால்தான் என்னவோ..இவ்வுலகில் குறைவுகளுடனும்,

வறுமையுடனும்,பல பாடுகளுடன் வாழ்ந்து மிகுந்த கஷ்டங்களுடன் வாழ்ந்து மறிப்பவர்களுக்கு தேவன் தமது ராஜியத்தை வாக்கு கொடுத்திருக்கிறார்..

தேவ ஞானமற்ற மூர்க்கர்களே கேளுங்கள்.

இந்த உலகத்தில் நீங்கள் வாழும் நோக்கம் எதற்காக?

உன் சுபாவம் கிறிஸ்துவின் சுபாவமாக மாற்றப்படவேண்டும்.இதற்க்காக நீ இவ்வுலகில் இருக்கிறாய்..

ஆனால் நீ செய்வது என்ன இவ்வுலகம் உனக்கு நிரந்திரம் என்பதுப்போன்று ஒவ்வொரு இமைப்பொழுதிலும் மாயையில் களிகூர்கிறாய்!

மாயையான அழிந்துப்போகும் வாழ்வுக்காக முழுமனதையும் செலுத்தி...சுயநலமாக வாழ்கிறாய்..

பணம் சம்பாதிக்க உன் மனம் பல நூதன தந்திரத்துடன் பிறரை ஏமாற்றவும்,பி ுடைய உரிமைமையையும்,உடமைகளையும் பறித்து..தனக்கென்று செத்து சேர்க்கிறாய்.

உன் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்காமல் உன் தந்திரத்தையும் உன் ஆனவத்தையும் கற்றுக்கொடுத்து..உன் சந்ததி அனைத்துமே தேவனால் புறக்கணிக்கப்பட நீயே சாபமாக இருக்கிறாய்..

தேவ ஞானம் இல்லாத..உலக ஞானம் உடைய மூர்க்கனே...கேள் உன் உலக கல்வியோ,உன் உலக ஞானமோ,உன் உலக பதவியோ,உன் உலக மேன்மையோ ஒன்றும் உன்னை அழிவில் இருந்து காப்பாற்றாது...

நீ உணர்வில்லாமல் அழிந்துப் போகிறாயே...

மூர்க்கனே நீ அடையப்போகும் புறக்கணிப்பை நினைத்து உள்ளம் கலங்குகிறதே!!!

உலக கல்வியை நினைத்து பெருமைப்பாராட்டிய உன் மனது தேவ ஞானத்துக்கு தூராமாயிற்றே...

உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது

மனந்திரும்பமாட்டாயா???

ஐயோ .. .உன் அறியாமையை நினைத்து என் மனது பரிதவிக்கிறதே!!

உலக ஞானமும்,உலக கல்வி கற்காத

பிறரை மூடன் என்று நீ சொன்னதின் நிமித்தமாக பரலோக தேவன் உன்னை புறம்பாக்கி போடுவாரே!!!

மனந்திரும்பமாட்டாயா....தேவ
உணர்வில்லாத உனக்கு எப்படி புரிய வைப்பது...

உன் அழிவை நினைத்து நான் மனம் கலங்குகிறேன்...

தேவனே கிருபையாக இரும்..

இன்னும் கொஞ்ச காலம் இவர்களுக்கு வாய்ப்பு கொடும்.

இவ்வுலகில் இவர்கள் மேட்டிமையை அழித்து தன்னைத்தான் உணர ஒரு வாய்ப்பு கொடுங்கள் தந்தையே!!!!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post