ஏன் எங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை

ஏன் எங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை?

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
யாக்கோபு 4:3

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
சங்கீதம் 66:18

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏசாயா 59:2

அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
எரேமியா 14:10

அவர்கள்உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.
எரேமியா 14:12

 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள், நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
நீதிமொழிகள் 1:24

என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
நீதிமொழிகள் 1:25

ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:26

நீங்கள் பயப்படும் காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும் போதும், நெருக்கமும் இடுக்கண்ணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:27

அப்பொழுது அவர்கள் என்னை நோக்கி கூப்பிடுவார்கள், நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன், அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
நீதிமொழிகள் 1:28

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள் 28:9

 அவர்களோ கவனிக்க மனதில்லாமல், தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டார்கள்.
சகரியா 7:11

வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின்மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள். ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
சகரியா 7:12

ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படிக் கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 7:13

அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள். அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
யோபு 35:12

தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
யோபு 35:13

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
யாக்கோபு 1:6

அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
யாக்கோபு 1:7

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
யாக்கோபு 1:8

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post