நோய்களை குணமாக்கும் தேவன்


நோய்களை குணமாக்கும் தேவன்

டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் பிரபல மனநோய் மருத்துவ நிபுணர். இவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், (Harvard University) பேராசிரியராக பணியாற்றினார். திடீரென்று அவர் ஒரு மர்ம நோயால் தாக்கப்பட்டார். நரம்பு மண்டலம் முழுவதும் தளர்ச்சியடைந்து சரீரம் செயிலிழந்தது. மருத்துவர்களால் அவரை சுகமாக்க முடியவில்லை. அவர் மருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தபடியால்மருத்துவர்களின் இயலாமை அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகில் நரம்பு தொடர்பான நிபுணர்கள் எங்கெங்கு உண்டோஅவர்கள் அவரை குணமாக்க அழைக்கபட்டனர். ஆனால் ஒரு பலனுமில்லை. தான் வாழ்ந்து என்ன பயன் என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.

டாக்டரின் இந்நிலை குறித்து அறிந்த ஒரு தேவ ஊழியர் அவரை . சாதாரண மனிதரான அந்த ஊழியர்ஜெபிக்குமுன்இயேசுகிறிஸ்துவைக் குறித்தும்அவர் அளிக்கும் தெய்வீக சுகத்தைக் குறித்தும் பேசினார். டாக்டருக்கோ நம்பிக்கை வரவில்லை. எனினும் அவருடைய அனுமதியுடன் தலையின் மீது கை வைத்து ஜெபித்தார். உடனே‘மின்சாரம் போன்ற வல்லமை என் உடலுக்குள் பிரவேசித்து செயல்படுகிறதை நான் உணர்ந்தேன். என் நரம்புகள் பெலப்படுகிறதை அறிகிறேன். நான் குணமாகிறேன்’ என்று உற்சாகமாக கூறிக்கொண்டே அவர் அற்புதமாக சுகமடைந்தார். அன்றே இயேசுவுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

மருத்துவராக இருந்து மிகுந்த செல்வம் படைத்தவராக இருந்தும் அவரது அந்த நோயிலிருந்து விடுதலை பெற முடியவில்லை.ஆனால் அவர் தேவனை அறிந்து கொண்ட பொழுது அவருக்கு ஒரு விடுதலை கிடைத்தது.

அது முதல் அவர் இயேசுவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்,இன்று நம்முடைய நாட்டிலும் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் நிறைய பேர் நம்முடைய தேவனையும்  நம்முடைய ஊழியர்களையும் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் பணத்திற்காக மதம் மாற்றுகிறார்கள் என்று சில பேர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.யார் ஒருவரையும் நம் பணத்தை கொடுத்து ஏமாற்றி நாம் அவர்களை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.தேவனுடைய வார்த்தை ஒருவனில் கிரியை செய்யும் பொழுதுதான் அவன் தேவனை ஏற்றுக் கொள்கிறான்.

மருத்துவர்களால் கூடாத காரியம் நம் இயேசுவால் கூடும். பொதுவாகவே நாம் மருந்து மாத்திரைகள் மீது நம்பிக்கை வைக்கிறோம். மருந்துகளை எடுப்பது தவறல்ல. வேதத்திலே எசேக்கியா ராஜா மரணத்துக்கு ஏதுவான வியாதி குணமாக அத்திப்பழ அடையை போடும்படி தேவனே கூறுகிறார். இருப்பினும் நமது நம்பிக்கையை மருந்துகளின் மேல் வைக்காமல்எல்லாவித மருந்துகளையும் கண்டுபிடிக்க மனிதனுக்கு ஞானம்கொடுக்கும் தேவன் மேலேயே வைப்போம். டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள். சுகத்தை தேவனிடமிருந்து எதிர்பாருங்கள். அவரே நம்மை குணமக்க வல்லவர்.

இன்றும் நம்மில் அநேகர் தீராத வேதனையோடும்குணமடையாத வியாதியோடும் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். இருந்த பணத்தையெல்லாம் மருத்துவத்திற்கு செலவழித்தும் வியாதி நீங்காமலிருக்கலாம். இயேசுகிறிஸ்துவை நம்பி வாருங்கள். அவர் குணமாக்கும் கர்த்தர். அவர் சிலுவையில் பட்ட காயங்களின் தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அவரிடம் வந்த அநேகர் முற்றிலும் சுகமானார்கள். இன்றும் அதே தேவனாய் மாறாதவராக குணப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய நாமங்களில் ஒன்று யெகோவா ரஃபா. அப்படியென்றால் குணமாக்கும் கர்த்தர் என்று அர்த்தமாகும். 

தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் படும் வேதனைகளை அறிந்த தேவன் நம் தேவன். நாம் படுகிற துன்பங்களை காண்கின்ற தேவன். அவருடைய தழும்புகளால் நம்மை குணமாக்கிற தேவன்.

இன்றும் நாம் அனைவரும் இந்த கரோனா வைரஸ்காக ஒருமனப்பட்டு ஜெபிப்போம்.தேவன் பெரிய காரியங்களை செய்வார்.உபவாச ஜெப நாள்(19-02-2020)

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 
பிலிப்பியர் 4:6.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post