நான்_செத்துட்டேன். நீங்க_செத்துட்டீங்களா?

என்னை சிந்திக்க வைத்த ஒரு பதிவு
           
நான்_செத்துட்டேன்…
நீங்க_செத்துட்டீங்களா.

எனக்கு தெரிந்த ஒரு நபர் திடீரென்று மரித்து விட்டார். அவர் வீட்டுக்கு சென்றேன். அவரை பெட்டியில் வைத்திருந்தார்கள். அவரை பிரிந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அந்த சரீரத்தை அடக்கம் செய்ய அவர்கள் கொண்டு சென்ற கல்லறைத்தோட்டம் வரை சென்றேன். அங்கே அவரது சரீரம் வைக்கப்பட்ட பெட்டியை குழிக்குள் இறக்கி, மண்ணை போட்டு மூடி, அவரை அடக்கம் செய்தார்கள். என் வீட்டுக்கு திரும்பி வந்தேன்.
.
வீட்டில் வந்து பார்த்தால், மரித்த அந்த நபர் என்னை பார்க்கும்படி, எங்கள் வீட்டிற்கு வந்து சேரில் அமர்ந்திருக்கிறார்.
.
இப்போது இதைக் கண்ட உடன் என்னுடைய உணர்ச்சிகள் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
.
பேய்க்கதை சொல்றேன்னு நினைச்சி பயந்திராதீங்க… கற்பனையாகத்தான் இந்த காரியத்தை எழுதியிக்கிறேன். ஆனால் இப்படித்தான் அநேக நேரங்களில் நம்மை பார்க்கும் போதும் நம் ஆண்டவராகிய இயேசுவுக்கும் அதிர்ச்சியாய் இருக்கிறது.
.
கிறிஸ்துவுக்குள் மரித்துவிட்டோம் என்று சொல்கிற நாம் அநேக நேரங்களில் எழுந்து பழைய சுவாபங்களில் கிரியை செய்து இயேசுவுக்கே அதிர்ச்சியை கொடுக்கிறோம்.
.
நாம் இரட்சிக்கப்படும்போதே நாம் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு விடுகிறோம் என்று வேதம் சொல்கிறது. கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்… (கலாத்தியர் 2:20)
.
நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், நான் கர்த்தருடைய பிள்ளை, நான் கிறிஸ்தவன் என்று பெருமையாய் சொல்லிக் கொள்ளுவோமென்றால் முதலில் நாம் மரித்திருக்க வேண்டும். நம்முடைய இரட்சிப்பில் நமக்கு நடக்கும் முதல் காரியமே மரணம்தான். நாம் கிறிஸ்துவுடனே கூட மரிக்காத பட்சத்தில் அவருக்குள் பிழைத்து வாழ்கின்ற வாழ்வு நமக்கில்லை.
.
நாம் இனிப் பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் என்று பவுல் சொல்கிறார். (ரோமர் 6:6) நம்முடைய பழைய சுவாபங்கள் உள்ள மனிதன், மாம்சபிரகாரமானவன் சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். இனி புது மனிதனாய் ஆவிக்குரியவனாய் இயேசுவின் சுவாபங்களோட நாம் வாழ வேண்டும்.
.
அப்படி சிலுவையில் அடிக்கப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பழைய மனிதன் மறுபடியும் மறுபடியும் எழுந்து நின்றால் அதற்கு அர்த்தம் என்ன? நாம் இன்னும் மரிக்கவில்லை என்றுதான் அர்த்தம். மரிக்கவில்லை என்றால், நாம் இன்னும் இரட்சிக்கப்படவேயில்லை என்று அர்த்தம்.
.
நீங்கள் மரித்துவிட்டீர்களா?
.
👉உங்களை மற்றவர்கள் நிந்தித்து பேசும் போது அடக்கம்பண்ணப்பட்ட பழைய மனிதன் கோபப்பட்டு பொங்குகிறானா?
.
👉உங்களுக்கு எதிராக பாவத்திற்கான சோதனை வரும்போது அந்த பாவத்தை செய்ய சரீரத்தின் அவயவங்கள் ஒத்துப்போகின்றதா?
.
👉நான் பெரியவன் அல்லது பெரியவள் என்கிற மேட்டிமையின் எண்ணம் உங்களுக்குள் அடிக்கடி தலைகாட்டுகிறதா?
.
👉உலகத்தின் பணத்தை பொருட்களை ஆஸ்தியை பார்க்கும் போது ஆசை ஆசையாய் வருகின்றதா?
.
இரட்சிக்கப்பட்டும் இப்படியெல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால், நீங்கள் இன்னும் உங்கள் பழைய மனிதனில் சாகவில்லை. உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
.
நான் செத்துட்டேன், நீங்க செத்துடீங்களா?

Click to Subscribe Our YouTube Channel

Click to Watch Our New Song, Umathanbai Ariyaamal

Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post