உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும்.



உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும்,

நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும்,
அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1:3

எப்படி செய்வது?
எவ்வாறு நடக்கவேண்டும்?
சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்றும், நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு,கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4:1

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளை:-
(1 தெசலோனிக்கேயர் 4:2)

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டும்.
இது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அப்படியானால் முதலில் நாம் என்ன செய்யவேண்டும்?
பரிசுத்தமாக வேண்டும் எனில்....நாம் வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்கவேண்டும்.
(1 தெசலோனிக்கேயர் 4:3)

2. தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படலாகாது.
(1 தெசலோனிக்கேயர் 4:4)

3. நம்முடைய சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளவேண்டும்
(1 தெசலோனிக்கேயர் 4:5)

4. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்.
(1 தெசலோனிக்கேயர் 4:9)

5.  கிறிஸ்துவுக்குள் வராத... புறம்பேயிருக்கிறவர்கள் நம்மைப் பற்றி...குறை சொல்லாதபடிக்கும் நாம் யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் நம்மை குற்றப்படுத்தாதபடிக்கு...எல்லாவற்றையும் குறைகளற்றிருக்கவேண்டும்
(1 தெசலோனிக்கேயர் 4:11)

6.நாம் அமைதலுள்ளவர்களாயிருக்கவேண்டும், மற்றும் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டும்.
(1 தெசலோனிக்கேயர் 4:12)

7. தங்களோடு இருந்த உறவினர்கள் மரித்துவிட்டதை  நினைத்து. .மறுபடியும் பார்க்கமுடியாததுப் போல.. நம்பிக்கையற்ற நிலையில் மற்றவர்கள் துக்கித்து, அறிவில்லாதிருப்பது போல இறந்தவர்கள் நிமித்தம் நாம் துக்கம் அடையக்கூடாது...
ஏனெனில்.....
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். ஆகையால் நாம் துக்கப்படலாகாது.
(1 தெசலோனிக்கேயர் 4:13,14)

7. பகலுக்குரியவர்களாகிய நாம் தெளிந்தவர்களாயிருந்து, "விசுவாசம்" "அன்பு" என்னும் 'மார்க்கவசத்தையும்',
"இரட்சிப்பின் நம்பிக்கையென்னும்" 'தலைச்சீராவையும்' தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
(1 தெசலோனிக்கேயர் 5:8)

நாம்மீது அக்கறைக்கொள்பவர்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும்?
நம் மேல் அக்கறைக்கொண்டு நம் தவறுகளை சுட்டிக்காட்டி நம்மை எச்சரித்து நமக்கு புத்தி சொல்லுகிறவர்கள்...முன்பு
நம் மீது அன்புக்கொண்டு நமக்கு செய்த எல்லா நன்மையான காரியங்களை நினைத்து அவர்களை மதித்து மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளவேண்டும் அவர்களுடன் நாம் சமாதானமாயிருக்கவேண்டும்
(1 தெசலோனிக்கேயர் 5:12,13)

நாம் பிறரைப் பார்க்கும் போது செய்யவேண்டியது என்ன?
ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்,
திடனற்றவர்களைத் தேற்றுங்கள்,
பலவீனரைத் தாங்குங்கள்,
எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு  தீமைசெய்யாதபடி ....அவருக்கும்  நன்மை செய்யவும் நமக்கு அதனால் நன்மை உண்டாகும்படி நடக்கவேண்டும்.
(1 தெசலோனிக்கேயர் 5:14,15)

எப்போதும் சந்தோசமாக இருக்கவேண்டும் மற்றும் இடைவிடாமல் ஜெபம் செய்யவேண்டும் எல்லா காரியத்திலும்
ஸ்தோத்திரம் செய்யவேண்டும்
(1 தெசலோனிக்கேயர் 5:16-18)

ஆவியில் எப்பொழுதும் நடந்துக்கொள்ளவேண்டும்.
இனி நடக்கவிருக்கும் காரியங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்களை சிந்தித்து கவனமாக பயபக்தியுடன் நடந்துக்கொள்ளவேண்டும்
மற்றும் சிலர் கூறும் தீர்க்கதரிசனங்களை அவற்றோடு ஒப்பிட்டுப்பார்த்தும் கிறிஸ்துவுக்குள் நம்மை ஊன்ற கட்டுவதாக இருக்கிறதா என்று சோதித்துப்பார்த்து ...நம் ஆவிக்கு நலமானவற்றை பிடித்துக்கொண்டு விசுவாசிக்கவேண்டும்.

பொல்லாங்காய் தோன்றுகிற எவற்றையும் விசுவாசிக்கவேண்டியதில்லை!அவற்றில் இருந்து நம் விலகி நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்குவார். நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.தேவனும் அவ்வாறு நம்மை தகுதிப்படுத்துவார்.
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
(1 தெசலோனிக்கேயர் 5:19-24)

3 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1:3

நாம் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கவேண்டும்
ஏனெனில்...
நம்முடைய தேவன் நம்மை தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும்,
தமது தயையுள்ள சித்தம் முழுவதையும்...மற்றும்
விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் நம்மிடத்தில் நிறைவேற்றுவார்
(2 தெசலோனிக்கேயர் 1:12)

‌துன்பங்களையும் உபத்திரவங்களையும் சந்திக்கும்போது தேவன் கிரியை செய்யும்வரை நாம் பொறுமையுடனும் அவர்மேல் அசையாத விசுவாசத்துடன்காணப்படவேண்டும்.
நாம் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க,
அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு,
தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1:5

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
Send your prayer requests to below mail id and we will pray for you

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post