பாரம்பரியமா? இரட்சிப்பின் அனுபவமா?

பாரம்பரியமா? இரட்சிப்பின் அனுபவமா?

சீர்திருத்தவாதிகளும், ஊழியர்களும், மனிதன் ஏற்படுத்திவைக்கும் போலிப் பாராம்பரியங்களுக்கு எதிராகப் போராடி மெய்க் கிறிஸ் தவத்தை நிலைநாட்டிய போதும், நாளடைவில் வரலாற்றில் மறுபடியும் பிசாசு போலிப் பாரம்பரியங்களுக்கு மனிதனை தலைசாய வைத்தான். மனிதன் ஆத்மீக விருத்தியற்று வாழ பிசாசு பயன்படுத்தும் சாதனங்களே சடங்குகளும், சம்பிரதாயங்களும், போலிப் பாரம்பரியங்களும்.

சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும், பாரம்பரியத்துக்கும் அடிமைப்பட்டிருக்கிறவர்களே! இன்று உங்களுக்கு எது தேவை? இயேசு சொல்லுகிறார், மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இல்லாதவன் பரலோகம் போவதில்லை என்று.

 பாரம்பரியத்தையும், சடங்குகளையும் வைத்துக்கொண்டு ஒருவரும் பரலோகம் போக முடியாது. நீங்கள் மரிக்கின்றபோது எல்லாச் சடங்குகளுக்கும் உங்களோடு சேர்த்து மூடப்படும். மெய்யான மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இருக்கின்ற உள்ளத்தில் சடங்குகளுக்கும், சம்பிரதாயத்துக்கும் இடமிருக்காது.
 
  ஒருவருடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து மெய்யாகக் குடிபுகுந்துவிட்டால் சடங்குகளுக்கும், பாரம்பரியத்துக்கும் அவருடைய வாழ்க்கையில் அன்றோடு சமாதி கட்டப்பட்டுவிடும். தொடர்ந்து சடங்கை நம்பி வாழ்கிறவன் கிறிஸ்துவுக்குப் பிள்ளையல்ல; நரகத்தில் பற்கள் கடிபட அக்கினியில் வேகப்போகிறவன்.

இந்துப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும், சடங்குகளிலும் இருந்து நமக்கு விடுதலை தர இயேசு இந்த உலகத்துக்கு வந்தார்; கல்வாரியில் மரித்தார்; உயிர்த்தெழுந்தார்.

 அவரை ஆண்டவராக விசுவாசித்து நேசிக்கிறவர்கள் அவர் மரித்த பாவப்பாரம்பரியத்தையும், சடங்குகளையும் தொடர்ந்து பின்பற்றுவார்களா? இயேசு குழிதோண்டிப் புதைத்த கோரப் பாரம்பரியத்தைக் கொண்டாடி மகிழ்வார்களா?
 
 பாரம்பரியத்துக்கும், சடங்குகளுக்கும் படையல் நடைபெறும் இடத்திலெல்லாம் பிசாசு ஆளுகிறான் என்பதை நீங்கள் உணரவில்லையா? சமபிரதாயங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிறிஸ்து தரும் இரட்சிப்பை இழந்து விடாதீர்கள். பரிசுத்த வாழ்க்கை வாழ பாரம்பரியம் ஒருநாளும் உதவ முடியாது. திருச்சபை பக்தியில் உயர பாரம்பரியம் ஏணியாக முடியாது. பாரம்பரியம் பக்திக்கு விரோதி; எதிரி.


Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com in

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post