தேவனின் அன்பு.

இவ்வுலகில்...தேவனின் அன்பை ருசித்து வாழ்வதில் இருக்கும் சுகம் வேற எதிலும் இருப்பதில்லை!

கோடி கோடியாக பணமும் ,சொத்துக்களும் இருந்தாலும் தேவனின் அன்பின் இனிமைக்கு முன் ஒரு புகையைப்போன்றதே!

உலகில் கிடைக்கும் "காதல்" அன்பு வலியைக் கொடுக்கும்.

ஆனால் தேவனாகிய என் தந்தையின் அன்பு வலி வேதனையிலும் அற்புதமான இளைப்பாறுதலையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

தேவனின் அன்புக்கு முன் மரணபயம் கூட தோற்றுப்போகும்.

தேவனின் அன்பை ஜெயிக்க இவ்வுலகில் எவ்வுலகிலும் அண்டங்களிலும் எதுவுமே  இல்லை!

தேவனுடைய அன்பு மிக இனிமையானது.
நம்முடைய தவறுகள்,தப்பிதங்களை எல்லாம் மன்னித்து மனதார நம்மை நேசித்து நம்மை மாற்றும் சக்தியும் வல்லமையும் அதற்கு உண்டு!

தந்தையாகிய தேவனின் அன்பை விட்டு நாம் எங்கும் ஓடி ஒளியமுடியாது.

அவர் நம்மை தேடி வருகிறார்.நம்மை அதிகாலையில் எழுப்பி நம்மோடு பேசுகிறார்..அவரின் அன்பை ருசிப்பவர்கள் பாக்கியவான்கள்.

அவரோடு பேசும் நேரங்கள் விலைமதிக்கமுடியாதவை!

அவருடைய பார்வையில் பூமி ஒரு துகள் போன்றது அந்த பூமியில் நாம் ஒரு தூசி போன்றவைதான்..அப்படிப்பட்ட நம்மை தேடி அன்பு பாராட்டும் அவருடைய உள்ளம் எத்தனை பெரியது.

தேவரீர் எங்களை ஆளுகை செய்ய இப்பூமியில்..இறங்கி வாரும்.
கொடுமைகள், அநீதிகள்,அநியாயங்கள்,எல்லாம் மாறிவிடுமே!அந்த நாள் என்று வரும் என்று ஏங்கித் தவிக்கிறோம்!

Follow us on

Websites

Daily bread

https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -

https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel

PerfectionInJesusChrist

https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page

https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post