மிஸ்னரிமார்களின் தியாகம்

ஒவ்வொரு மிஸ்னரிமார்கள் நினைத்திருந்தால் அவர்கள் தங்களுடைய நாட்டில் ..அவர்கள் சொத்து சுகங்களை வைத்து சகல வசதியோடு சுகமாக வாழ்ந்திருக்கலாம் .
அவர்கள் அதை விரும்பாமல்....கிறிஸ்துவின் அன்பை அறிந்துக்கொண்ட அவற்றை அனுபத்ததினால்...உலகத்தில் கிடைக்கும் எல்லா சுகங்களும் அவர்களுக்கு குப்பையாக தெரிந்தது.

அவர்கள் நோக்கம் எப்படியாகிலும் தான் பெற்ற கிறிஸ்துவின் அன்பை மற்ற எல்லா மனிதர்களும் பெறவேண்டும்,கிறிஸ்துவின் அன்பை ருசிக்கனும் என்ற ஒரே ஆவல்தான்...தங்கள் தாய் தந்தையை பிரிந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்து இந்தியாவுக்கு வந்து...கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கச்செய்தார்கள்..

அந்த மிஸ்னரிமார்களின் தியாகம் எத்தனை பெரிது...
அவர்கள் தங்களுக்கு உரிய சொத்துக்களை விற்று இந்தியாவிற்கு வந்து ஏழை எளிய ஜனங்களின் கல்வி தரம் உயர...கல்வி கூடங்களையும் கல்லூரிகளையும் கட்டி..அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவமனை கட்டி சேவை மனப்பான்மை ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து அவர்கள் பனியை நம்மிடம் கொடுத்துவிட்டு சென்றனர்...

ஆனால் நம்மவர்களோ அதை பராமரிக்கக்கூட முடியாமல் அந்த தியாகத்தால் கட்டப்பட்ட சேவை நிறுவனங்களை எல்லாவற்றிலும் முதன்மையாக அமர்ந்து..அவற்றின் மூலம் தங்களுக்கு சொத்துக்களை குவித்து சுகபோகமாக வாழ்கின்றனர்..

இதுவா கிறிஸ்துவின் அன்பு....?
இதற்கா...கிறிஸ்து சிலுவையில் தன் ஜீவனை விட்டார்?
இதற்காகவா...மிஸ்னரிமார்கள் தங்கள் குடும்பங்களை விட்டு நாம் கிறிஸ்துவின் அன்பை பெறனும் என்ற தியாகத்துக்கு நாம் செலுத்தும் பிரதிபலன்?

கிறிஸ்தவர்களாகிய நாம் துரோகிகள்.
நாம் கிறிஸ்த்துவின் அன்பை வெளிப்படையாக பேசி...அதை வைத்து...தனக்கே ஆதாயம் தேடுகிறோம் என்றால் ...நியாயதீர்ப்பில் நாம் தப்பிவிடுவோம் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்.
அவனவன் கிரியைக்குத்தக்க பலனை அனுபவிக்கவேண்டியது வரும்.என்பதாக இருக்கும்போது....கிறிஸ்துவின் அன்பை வெளிப்படையாக அறிவித்து அதையே தங்களுக்கு ஆதாயமாக்கினால்..அப்படிப்பட்டவர்கள் பெறப்போகும் ஆக்கினை எத்தனை பெரிதாக இருக்கும்!

தேவனே எங்கள் மேல் கிருபையாக இரும்.
எங்கள் தப்பிதங்களை மன்னியும்,எங்களுக்கு உணர்வுகளைக் கொடும்,நாங்கள் உம்முடைய அன்பை ருசிக்க எங்களுக்கு உதவி செய்யும்.அப்பொழுது நாங்கள் உலகம் குப்பை என்று உதறித்தள்ளி....உம் கற்பனைகளை அனைத்தையும்...கைக்கொண்டு..உம் அன்போடு பிறருக்கு சேவை செய்வோம்!

Follow us on

Websites

Daily bread

https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -

https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel

PerfectionInJesusChrist

https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page

https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post