நாம் யாருக்குள் இருக்கிறோம்?Jesus or Satan

 

கிறிஸ்துவுக்குள் என்ற நிலை.
தன்னைத்தான் வெறுப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

தன்னைத்தான் முதன்மைப்படுத்துவதில் இருந்து ஆரம்பிப்பதோ..சாத்தானுக்குள்..
அப்படியானால் இன்றய கிறிஸ்தவர்களின் நிலை???

தன்னை ஒருவன் புகழ்ந்துவிட்டால்...
தான் அதற்கு தகுதியானவன் என்று கிறிஸ்துவின் கிருபையை மறந்து தன்னைத்தான் மேன்மையாக எண்ணுகிற சிந்தை வந்துவிடுகிறது
தன்னை ஒருவன் மட்டம்தட்டிவிட்டால்...
சாந்தம் போய்விடுகிறது.


தன்னை ஒருவன் புறக்கனித்துவிட்டால்...
தாழ்மை போய்விடுகிறது.
தன்னை ஒருவன் நிந்தித்துவிட்டால் சந்தோசம் போய்விடுகிறது.
தனக்கு ஒருவன் அநியாயம் செய்துவிட்டால்..
அன்பு போய்விடுகிறது.
தனக்கு ஒருவன் அநீதி செய்துவிட்டால் பொறுமை போய்விடுகிறது.
தன் மீது அவதூறு ஒருவர் பரப்பிவிட்டால்..
சமாதானம் போய்விடுகிறது.
நம் சுயநலத்தை ஒருவர் சுட்டிக்காட்டிவிட்டால்
நற்குணம் போய்விடுகிறது.
நம் கஷ்டத்தில் நம்மை பரியாசம் செய்தவருக்கு நம்மைப்போன்று கஷ்டம் வந்துவிட்டால்...
தயவு போய்விடுகிறது...

நம் மனதுக்கு பிடித்தது என்று வரும்போது இச்சையடக்கம் போய்விடுகிறது.
அவனவன் சோதிக்கப்பட்டு பரீட்சித்து பார்க்கும்போது அநேகர் கிறிஸ்துவுக்குள் அல்ல சாத்தானுக்குள் இருப்பதை அறியலாம்...

தன்னைத்தான் இந்த காலை வேளையில் நாம் இதை உணர்ந்தால்
இந்த பேய்தனமான பிரதிகிரியைகளை வெளிப்படுத்தமாட்டோம்.
கிறிஸ்துவுக்குள் களிகூறுவோம்.

நம்மை நாமே வெறுத்து...கிறிஸ்து ஒருவருக்காகவே நாம் கிரயத்துக்கொள்ளப்படுள்ளத்தால் இனி எனக்கு அல்ல...கிறிஸ்துவுக்காக..என் வாழ்வு என்ற அர்ப்பணிக்கப்பட்ட தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
கலாத்தியர் 5:22

சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
கலாத்தியர் 5:23

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5:24

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
கலாத்தியர் 5:25

வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
கலாத்தியர் 5:26

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post