மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்




அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். – மத்தேயு 4:3-4


இயேசு கிறிஸ்து சோதிக்கப்படும் போது, அவர் சாத்தானை எதிர்ப்பதற்கு எந்த ஒரு பெரிய வல்லமையையோ, எந்த ஒரு ஆயுதத்தையோ பயன்படுத்தவில்லை. அவர் எளிமையாக தேவனுடைய வார்த்தையிலிருந்து இப்படி எழுதியிருக்கிறதே என்றார். இது இயேசு கிறிஸ்துவே நாம் பின்பற்ற வேண்டிய அடிச்சுவடி, நாமும் எப்படி சர்த்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என்பதையே இங்கு கற்றுக்கொடுக்கிறார். இயேசு கிறிஸ்துவை போல சாத்தானும் அவருக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து எடுத்து காண்பிக்கிறான், ஆனால் தேவனுடைய வார்த்தையின் அர்த்தத்தை சாத்தான் புரட்டி (தவறான வியாக்கியானம்) காண்பிக்கிறான். அதையும் இயேசு கிறிஸ்து தேவனுடைய வார்த்தையை எடுத்துகாட்டி அவனை மேற்கொள்கிறார். நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும், ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.(மத் 4:6-7) இந்த சம்பவத்தில் இயேசு கிறிஸ்து சோதிக்கப்படும் போது, தேவனுடைய வார்த்தையை சார்ந்து கொண்டு அதையே சாத்தானுக்கு எதிராக பயன்படுத்தினார். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சோதனையை ஜெயித்து வெற்றியுள்ள வாழ்க்கை செய்யவேண்டுமானால் இயேசு கிறிஸ்துவைப்போல தேவனுடைய வார்த்தையே உங்கள் ஆயுதம். உங்கள் ஆவிக்குரிய ஆயுதம் தேவனுடைய வார்த்தையே. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.(எபே 6:17) நீங்கள் தேவனுடைய வார்த்தையின் மூலம் சாத்தானை ஜெயிக்கப்போவதால், தேவனுடைய வார்த்தையை வாசிப்பதும் அதனை கைகொள்வதும் எவ்வளவு முக்கியமானது. தேவனுடைய வார்த்தையை வாசிப்பது, தியானிப்பது மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான எந்த பாவமான சிந்தனைகளையும் சாத்தான் கொண்டுவரும் போது, உங்களது சிந்தனைகளுக்கு பின்பாக இருந்து கிரியை செய்யும் சாத்தானுக்கு முன்பாக தேவனுடைய வார்த்தையை பேசுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.(மத் 4:10-11)

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். – வெளிப்படுத்தின விசேஷம் 12:11

0 Comments

Post a Comment

Post a Comment (0)