சுபாவம்/குணங்கள் மாற என்ன செய்ய வேண்டும்
சுபாவம் = கனிகள், நல்ல குணம்
*1) வேதத்தை தினந்தோறும்
ஆராய்ந்து பார்க்க வேண்டும் (அப் 17-11)* - பெரோயா பட்டணத்தார் தினந்தோறும் வசனத்தை ஆராய்ந்து பார்த்ததினால் நற்குணசாலிகளானார்கள். வசனத்தை படித்தால் மட்டும் போதாது. இந்த கருத்துள்ள வசனம் வேதத்தில் எங்கெல்லாம் உள்ளது என்று தேடி தேடி பார்க்க வேண்டும்.
*2) கர்த்தருடைய வேதத்தில் பிரயமாய் இருக்க வேண்டும் (சங் 1:2,3)* - தன் காலத்தில் தன் கனியை ( நல்ல சுபாவம், நல்ல குணங்கள்) தந்து என்று 3 ம் வசனம் கூறுகிறது. நீங்கள் வளரும்படி ஞானப்பால் மேல் வாஞ்சையாய் இருங்கள் (1 பேது 2-2). வேதத்தை கடமைக்காக படிக்க கூடாது, பிரியத்தோடு வாஞ்சையோடு படிக்க வேண்டும்.
*3) இரவும் பகலும் வேதத்தை தியானிக்க வேண்டும் (சங் 1:2,3)* தியானிக்கும் போது கர்த்தர் வழியை வாய்க்க பண்ணுவார் (யோசுவா 1-8). வசனம் உன்னில் இருந்தால் கண்டிப்பாக உன் குணம் மாறும். உன் வழிகளிலெல்லாம் அவரை (வசனத்தை) நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
(நீதிமொ 3:6) சுபாவம் மாறாததுதான் குடும்பத்தில் பிரச்சனைக்கு காரணம்.
*4) நல்ல குணம் உள்ளவர்களுடன் சேர வேண்டும் (ரூத் 3-11)* - ரூத் தன் மாமியார் உடன் சேர்ந்து பழகியவுடன் அவளது குணம் மாறியது. ரூத் மோவாபிய தேசத்தை சேர்ந்தவள். மோவாபியர்கள் பொல்லாதவர்கள். நகோமி ரூத்தை பார்த்து சொல்லும் வார்த்தை "உன் முந்தின நற்குணத்தை பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமாயிருந்தது" (3-10) " நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊரார் எல்லாம் அறிவார்கள்" (3-11). எவ்வளவு நல்ல சாட்சி. உங்களை பார்த்து இப்படி கூற முடியுமா ? பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்.
*5) இயேசுவிடம் கற்று கொள்ள வேண்டும் & இயேசுவின் நுகதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் (மத் 11-29)* - சாந்தமும், மனத்தாழ்மையும் என்னிடம் உண்டு கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். பொறுமை, (வெளி 3-10) இன்னும் அநேக குணங்களை இயேசுவிடம் கற்று கொள்ள வேண்டும்
*6) இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும*் - இருதயத்தில் மறைந்து இருக்கிற குணம் என்று 1 பேது 3-4 ல் வாசிக்கிறோம். பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்தில் இருந்து பொல்லாததை (கெட்ட சுபாவங்களை) எடுத்து காட்டுகிறான் (லூக் 6-45)
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் . லூக் 8 :15. இருதயம் சுத்தமாக இருந்தால்தான் கேட்ட, படித்த வசனங்கள் பலன் கொடுக்கும்.
*7) கர்த்தரில் நிலைத்திருக்க வேண்டும் (யோ 15-4)*
ஒருவன் என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளை கொடுப்பான் (யோ 15:5)
*8) தேவன் மேல் நம்பிக்கை உள்ள மனுஷன் கனி (நல்ல சுபாவம்) கொடுப்பான் (ஏரே 17:7,8)* 8ம் வசனத்தில் மழைதாழ்ச்சியான வருடஷத்திலும் தப்பாமல் கனி கொடுப்பான். கரத்தர் மேல் உள்ள நம்பிக்கை குறையாதபடி பார்த்து கொள்ள வேண்டும்
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வளர சுபாவம் மாற வேண்டும். சுபாவம் மாறவில்லை என்றால் நீ வளரவில்லை என்று அர்த்தம்
Post a Comment