Real fasting

உண்ணாமல் இருப்பது அல்ல தபசு
உன்னதரோடு இருப்பது தான் தபசு

தாடியுடன்  இருப்பது அல்ல தபசு
டாடியுடன் இருப்பது தான் தபசு

ஊன் வெறுப்பது அல்ல தபசு
உன்னை வெறுப்பது தான் தபசு

சிகரெட், தண்ணி வெறுப்பது அல்ல தபசு
சீக்ரெட் பாவங்களை வெறுப்பது தான் தபசு

பூ அணியாமல் இருப்பது அல்ல தபசு
இரட்சிப்பை அணிவது தான் தபசு

மாம்ச உணவை வெறுப்பது அல்ல தபசு
மாம்சீகத்தை வெறுப்பது தான் தபசு

நாற்பது நாட்களுக்கு மட்டும் தேவை அல்ல  தபசு
வாழ்நாள் முழுவதும் தேவை தபசு

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post