வாலிப சகோதரியே!! வாலிப சகோதரனே!! எச்சரிக்கை


வாலிப சகோதரியே!!
வாலிப சகோதரனே!!
எச்சரிக்கை

1).விபசாரத்தின் மறு பெயர் தான் காதல்.........

2).காதலும், வேசித்தனமும் ஒன்றுத்தான்.........

3).வேசிதனம் செய்பவன் தேவனுக்கு தூரமானவன்.........

யாக்கோபே, சிம்சோனே காதல் உனக்கு வேண்டாம் !

இன்று தேவனால் தெரிந்து கொள்ளப் பட்ட, பல ஆவிக்குரிய வாலிபர்கள் ஒரு பெண்ணின் மீது ஆசைபட்டு தங்களுடைய மேன்மையை இழந்து, பின்வாங்கி போனது உண்டு.

சிம்சோன்:

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன்கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லாமனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்

நீயாதிபதிகள் : 16 17.

சிம்சோன் பற்றி, நாம் வேதத்தில் தியானிக்கையில், அவன் ஒரு பெண்ணை விரும்பி நேசித்ததினாலேயே அழிந்து, தேவனுடைய மகிமையை இழந்துபோனான் என்று வேதம் சொல்கின்றது.

ஆம், சிம்சோனுக்கு  அன்று சாத்தானால் வைக்கப்பட்ட கண்ணி தான், இந்த காதல் !

கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல், எப்போதும் போல உதறிப் போட்டு வெளியே போவேன் என்றான்

நீயாதிபதிகள் : 16.20

ஆம் வாலிபர்களே, நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும் கைகொள்ளும் பொழுது, நமக்கு சாத்தானால்  வைக்கபடும் கண்ணி தான் இந்த காதல்."!

ஒரு பெண்ணின் மீது ஆசை பட்டபிறகு, நாம் தேவனுக்கு ஒழுங்காக ஊழியம் செய்யமுடியாது, தேவனுக்கு உண்மையாய் வாழ முடியாது, என்பதை அறிந்த சாத்தான்,

எப்படியாவது ஆவிக்குரிய வாலிபர்களை! காதல் என்ற கண்ணியில் விழவைக்க முயற்சிக்கின்றான்.

கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான், பாவியோ அவளால் பிடிபடுவான்.

பிர 7 :26

யாக்கோபு;

யாக்கோபை கூட, காதல் என்ற கண்ணியில் அகப்பட வைத்ததும் இந்த சாத்தான் தான்.

யாக்கோபு என்பவன், தேவனுடைய சித்தத்தை, தன் வாழ்க்கையில் நிறைவேற்ற விடாமல் தடுத்தான், ஒரு பெண்ணை காதலித்து, அந்த பெண்ணுக்காக பல ஆண்டுகள் வேலை செய்தான்.

யாக்கோபு சீரியா தேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்

ஓசியா ; 12 ;12

வாலிபனே, என்னால் முடியும், நான் மனதை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பேன், நான் காதலித்தாலும் என் தேவனுக்கு உண்மையாய் இருப்பேன் என்று ஒருகாலமும் சொல்லாதீர்கள்.❌

சாத்தான் என்பவன், காதல் என்ற அன்பினாலேயே உங்களை மடக்கி, உங்களால் ஒன்றும் செய்யகூடாதபடிக்கு  அதாவது, உங்களுக்கு அதின் மேல் மிகுந்த ஆசையை ஏற்படுத்தி, உங்களால் தேவனிடத்தில் ஜெபிக்கவும்! வேண்டவும் , முடியாதபடிக்கு வலையில் சிக்கவைத்து விடுவான்.

ஆதலால், தேவனுக்கு உண்மையாய் வாழுங்கள்.

சாத்தான்  கொண்டு வரும் கண்ணிகளையும், கன்னிகைகளையும் புறம்பே தள்ளிப்போடுங்கள்.

எத்தனையோ வாலிபர்கள் காதலிக்கின்றார்கள், அவர்களை விடுங்கள்!

ஆனால் யாக்கோபை " போலவும், சிம்சோனை" போலவும் தேர்ந்தெடுத்து தம்முடைய ஆவியால் அபிஷேகித்த நீங்களே மிகவும் முக்கியமானவர்கள்!

உங்களை கொண்டே தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற விரும்புகின்றார், இதற்க்காக அல்லவா உங்களை அபிஷேகித்தேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.

அதனால..... கர்த்தர் நம்மை அழைத்த நோக்கம் அறிந்து ,அவர் சித்தம் செய்து நிறைவேற்ற நம்மை முழுமையாய் ஒப்புக் கொடுத்து ,கர்த்தரை சார்ந்து இருந்து ,நமக்கு நியமித்த ஓட்டத்தில் சரியாக ஓடும். என்றைக்கும் ஜெயம் நமக்கே...

தோல்வி சாத்தானுக்கே..

ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post