நம் திருமண்டலத்தின் திருச்சபைகள் திரியேக தேவனால் நம் பகுதிக்கு அனுப்பப்பட்ட பல அயல்நாட்டு அருட்பணியாளர்கள் ,உத்தம போதகர்கள் ,சபை ஊழியர்களின் தியாகம் மற்றும் தன்னலமில்லா கிறிஸ்துவை மையமாக கொண்ட ஊழயத்தின் பலனாய் உருவானது.ஒவ்வொரு திருச்சபை மற்றும் நிறுவனங்களுக்குப் பின்னும் ஒரு தியாக வரலாறு இருக்கிறது.
நம் பரிசுத்த வேதத்தில் தேர்தல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எங்கேயும் இல்லாவிடினும் மூப்பருக்கான தகுதிகளை வேதம் நமக்குத் தெளிவாக கூறுகிறது.அப்போஸ்தலர்களுடைய நடபடிகளில் நாம் வாசிக்கிறோம் பந்தி விசாரிப்புக்காரருக்கான தகுதிகள்
அப்போஸ்தலர் 6:3 "ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்."
பவுல் தீத்துவுக்கு எழுதும் போது பட்டணங்கள் தோறும் கீழ்கண்ட தகுதியுடையவர்களை மூப்பர்களாக நியமிக்க கூறுகிறார்.
தீத்து 1:5-9 "நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன்."
"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்."
"ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,"
"அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,"
"ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்."
வேதம் கூறும் தகுதிகள் இல்லாமல் ஆலயத்திற்கு கொடுக்கும் காணிக்கையை பொறுத்து மூப்பராக வேண்டாம். நேர்மையாக கிடைக்காத எதுவுமே ஆசீர்வாதமாக இருக்காது.
கர்த்தரின் உதவியினால் இந்த தகுதிகளோடு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழக்க்கையை நடத்துவீர்களானால் மூப்பராகுங்கள்.
எந்த நிலையிலும் நீதிமன்றத்திற்கு செல்லாதீர்கள்.ஏனெனில் வேதம் சொல்லுகிறது.1 கொரிந்தியர் 6:7 "நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?"
நாம் வேதம் காட்டிய வழியில் செயல்படாமல் திருச்சபைத் தலைவர்களை குறை கூறுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வேதம் கூறுகிறபடி நாம் செயல்பட்டால் நம் தேசத்தை நாம் சீக்கிரத்தில் திருமண்டலமாக சந்திக்க முடியும்..
Post a Comment