விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்

“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்” (பிரசங்கி 7:2)

விருந்துவீடுகளுக்கு போவதையே மக்கள் விரும்புவர். அப்படிப்பட்ட சந்தோஷமான கூடுகைக்கு செல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், துக்கவீட்டுக்கு போவதே அதிக நலம் என்று சாலொமோன் கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? ஏனெனில், நாம் அங்கு செல்லும் போது, நமக்கும் அதே முடிவுதான் என்பதை அத்தருணத்தில் நம்மால் உணர முடியும். வருந்தத்தக்க, அநேகர் இதனை உணராமல், இந்த வாழ்க்கைதான் நிரந்தரம் என்று கருதி வாழ்கின்றனர். ஆனால், நாம் காணும் இவ்வுலகம் நிரந்தரமல்ல, இன்னும் வெகு சீக்கிரத்தில் வர இருக்கும் கடவுளின் இராஜ்ஜியமே நிரந்தரமானது என்று வேதாகமம் கூறுகிறது! மேலும், துக்கவீட்டிற்கு செல்லும் போது, மற்றொரு முக்கிய காரியத்தையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதாவது, மரணம் எல்லாருக்கும் இருக்கும் போதிலும், கிறிஸ்துவின் பலியின் மூலம், நம் அனைவருக்கும் இராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுதல் உண்டு என்பதே அக்காரியம். இதனாலேயே வேதாகமம், மரணத்தை ‘நித்திரைக்கு’ ஒப்பிடுகிறது. மெய்யாகவே, துக்கவீட்டிற்கு செல்வது, அநேக பாடங்களை நம் வாழ்க்கைக்கு கற்று தருகிறது. மேலும், மரணத்தின் வல்லமை சிலுவையில் முறியடிக்கப்பட்டது என்ற ஆறுதலையும் நமக்கு அளிக்கிறது. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post