“பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்” (1 யோவான் 4:7)
காலை 7 மணி அளவில், ஒரு மனிதன் கடை சென்று காபி சொன்னான். அதை பெற்று ருசித்தான், ஆனால் அது மிகவும் கசப்பாக இருந்தது. அதில் சர்க்கரை இல்லை! எனவே, தாமதமின்றி சர்க்கரையை சேர்த்து பருகினான். அவன் நாவு இனிப்பாய் மாறியது, அதனை உணர்ந்து மகிழ்ந்தான். ஆம், இந்த கசப்பான உலகில், அன்பு நம் வாழ்வை இனிதாக்கும் சர்க்கரையை போல் உள்ளது. ஆனால் சிலர், பல காரணங்களினால் அதனை தங்கள் வாழ்வில் சேர்க்க மறந்துவிடுகின்றனர். ஆனால், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது என்று வேதாகமம் கூறுதிறது. எப்படியெனில், மனுக்குலம் தவறு செய்தபின், கடவுள் அவர்களை கைவிட்டிருக்கலாம். ஆனால், தன் ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பி, பாவ மனுக்குலத்தின் மீது கடவுள் தம் அன்பை பொழிந்தார். கடவுளின் அன்பு, இந்த கசப்பான உலகில், நம் கண்களுக்கு தெரியா வண்ணம் இருக்கலாம். ஆனால், அதனை நாம் அறிந்து உணர்ந்து கொள்ளும் போது, நம் வாழ்க்கை இனிப்பாக மாறும். மேலும், கடவுள் நம் மேல் காட்டிய அன்பு, மற்றவர்களை நாம் அன்புகூர உந்துதல் அளிக்கும். இப்படியாக, நாம் கடவுளால் பிறந்தவர்களாயும், அவரை அறிந்தவர்களாயும் திகழ்வோம். ஆமென்!

Post a Comment