மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை

“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதிமொழிகள் 12:25)

இன்றைய சூழலில், மனிதர்கள் பல காரியங்களை குறித்து கவலை அடைகின்றனர். எதிர்காலம், வேலை, குடும்பம் போன்று பல காரியங்கள் மனிதனை கவலையில் சிக்க வைத்துள்ளது. மேலும், இக்கவலைகள் நம்மில் பயத்தின் எண்ணங்களை உருவாக்கி, இருதயத்தை ஒடுக்குகின்றது. நாம் அநேக காரியங்களை குறித்து கவலை அடைவது, இந்த உலகம் நிரந்தரம் என்று எண்ணி விடுவதே காரணமாகும். நம்மை அறியாமல், நாம் நிரந்தரமாக இங்கு இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் நம்மில் வந்துவிடுகிறது. ஆனால், இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல என்று வேதாகமம் எச்சரிக்கின்றது. சொல்லப்போனால், நாளை என்ன நடக்கும் என்பதே நமக்கு தெரியாது. இதனாலேயே, ‘நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்’ என்று இயேசு கூறுகிறார். ஆகவே நாம், ‘இன்றைய நாளுக்காக’ நன்றியுள்ளவர்களாய் இருந்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும். இரண்டாவது, கடவுளின் வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைப்பது, நம் இருதயத்தை மகிழ்ச்சியாக்கும். உதாரணமாக, இந்த உலகில் நடக்கும் பிரச்சனைகளை காணும் போது, இன்னும் சீக்கிரத்தில் கடவுளின் இராஜ்ஜியம் வந்து, நிரந்தரமாக நிலைக்கும் என்ற இராஜ்ஜியத்தின் வாக்குத்தத்தம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அல்லவா. எனவே, கர்த்தரிளும், அவர் வார்த்தையிலும் நாம் எப்போதும் மகிழ்ந்திருப்போமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post