மனந்திரும்புதல்

“மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” (மத்தேயு 3:8)

யோவான்ஸ்நானகர் தன் ஊழியத்தை தொடங்கிய போது, மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார். ‘மனந்திரும்புதல்’ என்ற வாத்தையின் கிரேக்க பதம், ‘மேட்டானியா’ என்பதாகும். அதன் அர்த்தம் ‘எண்ணங்களில் மாற்றம்’ என்பதாகும். ஆகவே, ஒருவர் மனந்திரும்பினால், அவர் எண்ணங்களில் மாற்றம் இருக்க வேண்டும். முக்கியமாக, அவர் தன் மனந்திரும்புதலை செய்கையில் காண்பிக்க வேண்டும். செயல் இல்லாமல், மனந்திரும்புதல் அர்த்தமற்று விளங்கும். உதாரணமாக, பேதுரு இயேசுவை புறக்கணித்தார், ஆனால் அவர் மனந்திரும்பி, சுவிசேஷ ஊழியம் செய்து, இவ்வாறு தன் மனந்திரும்புதலை செய்கையில் வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் மனந்திரும்பி, அதற்கேற்ற செயல்களை செய்யாமல் இருந்திருந்தால், அவர் மனந்திரும்புதலுக்கு என்ன அர்த்தம் இருந்திருக்கும்? ஆனால், பேதுரு மனந்திரும்பி, அதற்கேற்ற கிரியைகளை செய்தார். எனவே நாமும் மனந்திரும்பி கிரியை செய்ய வேண்டும். மேலும், நம் மனந்திரும்புதல் ‘கிறிஸ்துவில்’ இருக்க வேண்டும். ஏனெனில் அவரின் பலியின் மூலமாகவே நம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. எனவே, நாம் கிறிஸ்துவுக்குள் மனந்திரும்பும் போது, பிதா நம் பாவத்தை மன்னித்து, கிறிஸ்துவின் நீதியினால் நம்மை மூடிவிடுகிறார். எனவே, நாம் கிறிஸ்துவுக்குள் மனந்திரும்பி, ஏற்ற கனிகளைக் கொடுப்போமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post