முழங்காலிடு! கலங்காதிரு!

முழங்காலிடு! கலங்காதிரு!

அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 
லூக்கா 22:41

முழங்காலிடுதல் என்பது சரணாகதி அடைவதாம்! போரில் தோற்பவரும் அப்படிச் செய்வதுண்டு! அல்லது தோல்வியை ஒப்புக்கொள்பவரும், தலைசாய்த்து முழங்காலிடுவதுண்டு!

ஆனால் *கிறிஸ்தவர்கள் முழங்காலிடுவது வெற்றி பெறுவதற்கே! தாழ்த்தி ஜெபிக்கையில் எதிர்ப்புக்களை வீழ்த்திப்போடுமே தேவ பிரசன்னம்!*

இன்றைக்கு அனேக சபைகளில் முழங்கால் ஜெபம் இல்லை! வீடுகளில் இல்லை! எனவே, வெற்றிகளும் இல்லை!

வேதத்தில் காண்கையில்,

சாலொமோன் ஒரு அரசனாக இருக்கையிலும்,
1 இராஜா 8:54

எலியா ஓர் தீர்க்கதரிசியாகவும்,
1 இராஜா 18:42

எஸ்றா ஓர் வேத அறிஞராகவும்,
எஸ் 9:5

தானியேல் ஓர் அரசு அலுவலராக, தீர்க்கதரிசியாகவும்,
தானி 6:10

ஸ்தேவான் ஓர் கடைநிலை ஊழியனாகவும்,
அப் 7:60

பேதுரு ஓர் அப்போஸ்தலனாகவும்,
அப் 9:40

பவுல் ஓர் ஊழியனாக, அப்போஸ்தலனாக,
அப் 20:36

மீட்பர் இயேசு, தேவகுமாரனாயிருந்தும்
லூக் 22:41

*முழங்காலிட்டு ஜெபித்தார்கள் எனில், நாம்?*

*ஜெபிக்காத மனிதனை யாரும் சபிக்கத் தேவையில்லை!*

முடிந்தவரை முழங்காலிடுவோம்! ஜெபிப்போம்! கலங்காதிருப்போம்! ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post