பிள்ளைகளைப் தேவனுக்கேற்ற நபர்களாய் உருவாக்குத

பிள்ளைகளைப் தேவனுக்கேற்ற நபர்களாய் உருவாக்குதல்.

நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும் எழுந்திருறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,” - உபா.6:7

குடும்பத்தை பாதுகாத்து போஷிக்கவேண்யது குடும்பத் தலைவருடைய பொறுப்பு. அன்றாடம் வேலை செய்து பிள்ளைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் பணம் சேர்ப்பதும் அதில் அடங்கும். ஆனால் பணம் அதிகமாய் சேர்த்து வைப்பது மட்டுமே ஒரு தகப்பனுடைய நோக்கமாகவும் முழுநேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருக்குமானால் அது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கும்.

ஒரு அப்பா தன் பிள்ளைகளோடு ஒவ்வொரு நாளும் சிறிதளவாவது நேரம் செலவழிப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் உணருவதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். சிறுவர்கள் போதைப்பொருட்கள் மற்றும் பல குற்றங்களுக்கு அடிமையாகுதலைக் குறித்து அந்தக் கணக்கெடுப்பு கூறுவது என்ன தெரியுமா?

சிறையிலுள்ள 85% வாலிபர்கள் தகப்பன் வீட்டில் இல்லாமல் வளர்ந்தவர்கள்.

தகப்பனாரோடு வளரும் பிள்ளைகளைக் காட்டிலும் தகப்பனின் நெருக்கமில்லாமல் வளரும் பிள்ளைகள் 3 மடங்கு புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது.

தற்கொலையில் ஈடுபடும் வாலிபர்களில் நான்கில் மூன்றுபேர் இளம் வயதில் 15-19 வயதிலுள்ள வாலிபப்பிள்ளைகள் திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அதிகமாயுண்டு.

அப்பா இல்லாமல் தாயோடு மட்டும் ஆலய ஆராதனைக்குச் செல்லும் பிள்ளைகளில் 2% பேர்தான் தங்கள் பின்நாட்களில் தொடர்ந்து சபைகளுக்கு செல்கின்றனர். ஆனால் தாய்தகப்பனோடு இணைந்து செல்லும் பிள்ளைகளில் 44% பேர் தொடர்ந்து சபைக்கு செல்கின்றனர். (ஆதாரம்:”52 Things Kids need from a Day” by Jay Payleitner)

இந்த நாளின் செய்தி என்ன? அப்பாக்களே நீங்கள் முக்கியமானவர்கள். மேற்கண்ட வசனத்தில் வீட்டில் பிள்ளைகளோடு சம்பாஷித்துக் கொண்டேயிருப்பது  என்பது: பிள்ளைகளோடு தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்தும், நற்காரியங்களையும் குறித்தும் பிள்ளைகளுக்கு ஆர்வமுண்டாகும்படி பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். இதுவே உங்களுடைய பிரதான அழைப்பு! ஆகவே வீட்டிற்கு வ்ந்தால் செய்தித்தாள், T.V. சேனல்கள், Whatsapp இவற்றிலேயே நேரத்தையெல்லாம் செலவிட்டு விட்டு, 

காலம் கடந்த பின் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படும்படி நடவாமல், இன்றிலிருந்தே ஜெபித்து அவர்களோடு நேரம் செலவழித்து, தேவனுக்கேற்ற நபர்களாய் உருவாக்கிவிட்டால் எவ்வளவு நல்லது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post