கிறிஸ்து இந்த பூமியிலே மனிதனாக வாழ்ந்த போது எல்லோரிடமும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்து சொல்லிய உபதேசமும் எல்லோரிடமும் அன்பாகயிருங்கள் என்பதே.
கிறிஸ்து தன்னை பகைத்து வேதனைப்படுத்தியோரையும் மன்னித்து ஜெபித்தார்.
ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளும் பலர் அன்பில்லாதவர்களாக பெயரிலே கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.
அன்பில்லாதோர் கிறிஸ்தவர்கள் அல்ல, 1யோவான்4:8
கிறிஸ்துவை மறுதலிப்போர்.
காரணமில்லாமல் பகைப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்று கிறிஸ்து கூறியுள்ளார்.
கிறிஸ்து கூறிய அன்பு நம்முடைய வாழ்விலே வெளிப்படும் வாழ்க்கை வாழ்கிறோமா
எவர் மேலாகிலும் பகையோடும், பழிவாங்கும் கசப்புத்தன்மையோடும் வாழ்ந்து கொண்டு ஆலயம் (சபை) செல்வது, வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, காணிக்கை செலுத்துவது, ஊழியத்தை தாங்குவது, ஊழியம் செய்வது எனறு எதை செய்தாலும் அது வீண்.
அன்பில்லாமல் மன்னித்து மறக்கும் தன்மை இல்லாதோர் உண்மை கிறிஸ்தவர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் என்ற வேஷம் போட்டுக் கொண்டவர்கள்.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20.
Post a Comment