கொடிய உலகின் நிலை

இவ்விரு திறத்தாருடைய நிலைமையைர்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே” (பிரசங்கி 4:3)

இந்த கொடிய உலகின் நிலையை கண்டு சாலொமோன் வருந்துகின்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை கொடுமை படுத்துகின்றனர், அவர்களை தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை என்று வேதனை அடைகிறார். எனவே மரித்தவர்களின் நிலை சற்று நல்லது ஏனெனில் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களை இனி காணப்போவதில்லை என்கிறார். இருப்பினும், 

இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே மேல் என்று கருதுகிறார், ஏனெனில் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளை அவர்கள் காணவில்லையே. உண்மையில், நன்மைகளை காட்டிலும் தீமைகளே அதிகமாக இங்கு உள்ளது, எனவே தான் சாலொமோன் இவ்வாறு கூறுகிறார். ஆனால், தீமைகள் பெருகினாலும், அவைகள் வெகு காலம் நீடிக்காது என்று வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது! சீக்கிரத்தில் நம் தேவன், தீமைகளை அழிப்பார், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கேட்கப்படும். மேலும், மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து  வருவார்கள். 

எனவே நாம் எப்போதும் கடவுளின் இராஜ்ஜியத்தை தேடி, அதற்காக நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்துவின் சுவடுகளை பின்பற்றினால், அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவோம் என்பது நிச்சயம். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post