பெலனை தந்து நம்மை திடப்படுத்துபவர்.

“அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்” (யாத்திராகமம் 4:13)

பார்வோனை சந்திக்க, கர்த்தர் மோசேயிடம் கூறின போது, அவர் பயந்தார். தன்னை போன்ற சாதாரண ஒரு மனிதன் அவ்வளவு பெரிய மனிதனை எப்படி எதிர்க்க முடியும் என்று திகைத்தார். எனவே மோசே, கர்த்தர் தன்னை அனுப்பியதாக சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள் என்று கூறினார். எனவே, மோசே முதலில் நம்புவதற்கு, தேவன் சில அற்புதங்களை அவர் முன் செய்தார். அவைகளை கண்டும், ‘ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்’ என்று மோசே கூறினார். ஆனால், கர்த்தர் மோசேயை பயன்படுத்தினார், பின்னர் மோசே, இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அநேக அற்புதங்களை செய்தார், இஸ்ரயேல் மக்களை கடினமான சூழ்நிலையில் வழிநடத்தினார், இப்படியாக கர்த்தரின் வல்லமையான தீர்க்கதரிசியாக மோசே மாறினார். முதலில் பேசவே தயங்கியவர், கடவுளின் வல்லமையான மனிதனாக பின்னர் மாறினார். நம் கிறிஸ்தவ பயணத்திலும், சில நேரங்களில் நாம் பெலனற்றும், பலவீனமாகவும் இருக்கலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள தேவன் நம் பக்கம் இருப்பதினால், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் மேற்கொள்ள முடியும்! எனவே, நாம் எப்போதும் கர்த்தரை நம்புவோம், அவர் நமக்கு வேண்டிய பெலனை தந்து நம்மை திடப்படுத்துவார். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post