என்றும் காணப்படாத அன்பு

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:7,8)

மனிதர்கள் எல்லாரும் தங்கள் வாழ்வை மேன்மையாக எண்ணுகின்றனர். இதனாலேயே, அக்கிரமங்களையும், பாடுகளையும் குறித்து அனுதினம் கேள்விப்படும் பொழுதும் நாம் அமைதலுடனே நம் சொகுசான வீட்டிற்குள் மூடி கிடக்கிறோம். ஆனால், உத்வேகம் கொண்ட சில மனிதர்கள் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடக்கும் பொழுது அதனை தட்டிக் கேட்டு அதற்காக போராடியும், மரித்தும் உள்ளனர். அப்படிப்பட்ட மனிதர்கள் பலருக்கு முன் உதாரணமாக இருக்கின்றனர். ஆனால், அக்கிரமம் செய்கிறவர்களுக்காகவும், தீயவர்களுக்காகவும் ஒருவரும் போராடி மரிப்பது கிடையாது. இயேசுவுக்கு முன், மனுக்குலத்தின் நிலை இவ்வாறாகவே இருந்தது. ஆதாமின் பாவத்தினால் நாம் எல்லாரும் பாவிகளாகவும், தீயவர்களாகவும் இருந்தோம். கடவுள் கொடுத்த தண்டனையான மரணம் நீதியானதே. இருப்பினும், கி.பி 33ல், நாம் இன்னும் மனந்திரும்பாத பாவிகளாய் இருக்கையில், நம்மை மீட்க இயேசு என்ற ஒருவர் தன்னையே சிலுவையில் ஒப்பு கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். என்றும் காணப்படாத அன்பே அவர் அன்பு. எனவே இந்த அன்பை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம் கடமை ஆகும். கடவுளின் இந்த அன்பில் இரட்சிப்பு உண்டு என்பதை நாம் நினைவில் வைத்து, மற்றவர்களும் அதனை உணரச் செய்ய வேண்டும். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post