கிறிஸ்துவின் ஆட்சி


ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12:14)

இதுவரை, பலவகை இராஜ்ஜியங்களை மனுக்குலம் கண்டுவிட்டது. நீதியையும், சமாதானத்தையும் தருவதாக இந்த இராஜ்ஜியங்கள் வாக்குறுதி அளித்தன. இருப்பினும், பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் கண்முன்னே கொடுமையாக நிகழ்வுகள் நடக்கின்றன, சில கொடுமைகள் இன்னும் அந்தரங்கமாகவே உள்ளன. இவைகளை காணும் போது, நம் தேவன் ஏன் அமைதி காக்கின்றார் என்று நாம் விரக்தி அடைகிறோம். ஆனால், ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார் என்று வேதாகமம் எச்சரிக்கிறது. ஆம், கிறிஸ்துவின் ஆட்சி தொடங்கும் போது, எல்லா காரியங்களும் நியாயத்தில் கொண்டு வரப்படும். மேலும், எல்லா தீமைகளும், பாடுகளும் அப்போது அழிக்கப்படும். இதனாலேயே, ‘என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல’ என்று இயேசு கூறினார். ஏனெனில், இந்த தீய உலகம் இருக்கும்வரை, இப்பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை! கடவுளின் இராஜ்ஜியத்தில் மட்டுமே நாம் விரும்பும் முழு மகிழ்ச்சி காணப்படும். எனவே, அந்த இராஜ்ஜியத்தில் இடம் பெற, நம்மை நாமே தயார் செய்வோமாக. ஆம், கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. ஆமென்!



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post