பாவத்தில் சறுக்கி, அதில் மகிழ தொடங்கிவிடதே

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18)

இந்த வசனம் ஆங்கிலத்தில், ‘நான் பாவத்தில் மகிழ்தேனானால், ஆண்டவர் எனக்கு செவிகொடார்’ என்று உள்ளது. ஆம், பாவம் அழிவை உண்டாக்கும், எனவேதான் கர்த்தர் அதை வெறுக்கிறார். மொத்த மனுக்குலமும் மரணம் என்னும் சாபத்தில் சென்ற காரணம், நம் முந்தைய பெற்றோர்கள் செய்த முதல் பாவம் தான்! அதனை தொடர்ந்து, மனுக்குலம் பாவத்தில் சறுக்கி, அதில் மகிழ தொடங்கிவிட்டது.  வருந்தத்தக்க, அநேகர் கிறிஸ்துவை ஏற்ற பின்னும், பாவத்தையும் அக்கிரமத்தையும் சுலபமாக செய்கின்றனர். ஆனால், அப்படிப்பட்டவர்களின் ஜெபங்களை கர்த்தர் கேட்பதில்லை என்று வேதாகமம் எச்சரிக்கிறது. தாவீது இராஜா பாவங்களை செய்தார், ஆனால் அதனை அவர் உணர்ந்தபின், அவர் மனந்திரும்பி, அப்பாவங்களிலிருந்து விலகினார். ஒருவேளை அவர் அப்பாவங்களில் நிலைத்து அதில் மகிழ்ந்திருப்பாரானால், நிச்சயமாக கர்த்தர் அவர் ஜெபத்தை கேட்டிருக்கமாட்டார். ஆனால், கர்த்தர் தன் ஜெபத்தை கேட்கிறார் என்பதில் தாவீது நிச்சயம் கொண்டிருந்தார், ஏனெனில் அவர் மனந்திரும்பினார். எனவே, நம் கிறிஸ்தவ வாழ்க்கையிலும்,  பாவத்தில் நாம் மகிழ்ந்து வாழ்க்கூடாது. மாறாக, நாம் மனந்திரும்பி, கிறிஸ்து கட்டளையிட்ட சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்பொழுது, பரமண்டலத்தில் உள்ள நம் பிதா, நம் ஜெபத்தை கேட்டு, தம் சித்தத்தின்படி நம்மை அதிகமாக ஆசீர்வதிப்பார்.  ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post