உண்மையாக மனந்திரும்பும் பொழுது, அவர் உடனே மன்னிக்கிறார்

ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்” (1 இராஜாக்கள் 21:27)

சாலொமோனின் மரணத்திற்குபின், ஒன்றாக இருந்த இஸ்ரயேல் இராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது. வட இராஜ்ஜியம் இஸ்ரயேல் என்றும், தென் இராஜ்ஜியம் யூதா என்றும் அழைக்கப்பட்டது. ஆகாப், வட இராஜ்ஜியத்தில் ஏழாம் இராஜாவாக ஆளுகை செய்து, கடவுளுக்கு விரோதமான தீமைகளில் ஈடுப்பட்டான். அவனும் அவன் மனைவி யேசபேலும், கடவுளின் தீர்க்கதரிசிகளுக்கும் மக்களுக்கும் விரோதமாக செயல்ப்பட்டனர்.  இஸ்ரயேலின் கொடிய இராஜா ‘ஆகாப்’ என்றும் கருதப்படுகிறது.  எனவே, கடவுள் எலியா தீர்க்கதரிசியை அனுப்பி, ஆகாப்பும் அவன் குடும்பமும் கொடிய முறையில் அழிக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, ஆகாப் இரட்டைப்போர்த்திக்கொண்டு, உபவாசம் செய்து, இப்படியாக தன்னை தாழ்த்தினான். அவன் மனந்திரும்பிய காரணத்தால் பிழைத்தான். நிச்சயமாக, நம் கடவுள் கிருபையும் மிகுந்த இரக்கமும் கொண்டவர். எனவே நாம் உண்மையாக மனந்திரும்பும் பொழுது, அவர் உடனே மன்னிக்கிறார். மிகவும் கொடுமையான இராஜாவிற்கே கடவுளின் கண்களில் தயவு கிடைத்தது. கடவுளின் இரக்கத்திற்கு இது மிக சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post