மனித கோட்பாடுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றி கடவுளை வீணாய் ஆராதனை செய்கின்றனர்

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” (மாற்கு 7:7)

கி.பி 1ம் நூற்றாண்டில் இயேசு தன்னை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்த பூமிக்கு வந்தார். அப்பொழுது அவர் இஸ்ரயேலர்களில் மத்தியில் பிரசங்கித்தார். ஆபிரகாம் தொடங்கி கடவுள் தெரிந்து கொண்ட மக்கள் இஸ்ரயேலர்கள். எனவேதான், கடவுள் அவர்களுக்கு மோசே மூலமாக நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். ஆனால், கடவுளை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்காமல், வெளிப்படையாக திகழும் மனித கோட்பாடுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றினர். இதனால் அவர்கள் கடவுளை வீணாய் ஆராதனை செய்கின்றனர் என இயேசு கூறுகிறார். இதனாலேயே, அவர்களை கண்டித்தார், இருப்பினும் பெரும்பாலான 1ம் நூற்றாண்டு யூதர்கள் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். இயேசுவின் சீடர்களான நாம், கடவுளை ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்ய வேண்டும். ஆனால், ஆன்று போல் இன்றும் மனித கோட்பாடுகளையும், பாரம்பரியத்தையுமே பெரும்பாலானோர் பிரசங்கிக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.  உண்மையாக, கடவுள் அப்படிப்பட்ட ஆராதனையை ஏற்பதில்லை. நாம் கடவுளை ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்ய வேண்டும். எனவே, மனித கோட்பாடுகளிலும், பாரம்பரியத்திலும் நாம் சிக்கி கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாக இருந்து, கடவுளை ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்வோமாக. அப்பொழுது, கடவுள் நம் ஆராதனையில் பிரியப்படுவார்.  ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post