உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை!
ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
சபையை உலகத்தோடு இனைப்பதுதான் பிலேயாமின் உபதேசத்தின் வழிமுறை!
நம்மை நாம் உயர்வாய் இந்த உலகத்தில் செழிப்பாய் இருக்கவேண்டும் என்றும் இந்த உலகத்தை நன்றாய் அனுபவிக்கவும் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ண தூண்டும் போதகம் பிலேயாம் போதனையே!
இதை விரும்புகிறவர்கள் புனிதத்திற்கும்,சுத்தத்திற்கும் கவனம் செலுத்தமாட்டார்கள் பிலேயாம் போதனைக்கு இணங்கிப்போனவர்கள் தேவனை மறுதலிக்க அனுமத்திக்கிறார்கள்.
தேவன் கொடுத்த வரத்தை வைத்து சம்பாத்தித்த முதல் நபர் பிலேயாம்தான் அதன் வழிதோன்றல்கள் இப்போது ஆங்காங்கே நாம் பார்க்கமுடிகிறது.
அநீதத்தின் கூலியை விரும்புதல்,வெகுமதிக்காய் பேராசைப்பட்டது 2பேது2:5,மற்றும் யூதா11 சுட்டிக்காட்டுகிறது.
Post a Comment