நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்




நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் - மத் 5:14

நேற்று ஒரு கிறிஸ்தவ சகோதரர் ஏன் பிரதர் உங்கள் வீட்டில் Christmas Star இல்லை என்று கேட்டார். அதற்கு நான் அந்த சகோதரன் இடம் மேலே உள்ள வசனத்தை கூறி நாம்தான் உலகத்து Star (வெளிச்சம் கொடுப்பவர்கள்) ஆக இருக்க வேண்டும் என்று கூறினேன்.

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16

வெளிச்சம் = நற்கிரியைகள்.

 நமது நற்கிரியை மூலம் நாம் இந்த உலகில் ஒளி வீச வேண்டும். தேவ ஜனமே உன்னுடைய நற்கிரியைகள் மூலம்  குடும்பத்தில், அக்கம்பக்கம், வேலை பார்க்கும் இடத்தில் வெளிச்சம் வீசுகிறாயா ?

எனக்கு ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை தெரியும். டிசம்பர் மாதம் பிறந்தால் போதும் வீட்டில்  Christmas Star ஜொலிப்பதை காணலாம். ஆனால் வீட்டை சுற்றி இருப்பவர்கள் உடன் இவர்கள் பேசுவது கிடையாது. சண்டை.

அடியேன் சாப்பாட்டு நேரத்தில் அருகில் உள்ள ஆலயத்தில் சென்று ஜெபிப்பது வழக்கம். வருகிற 20 ம் தேதி அந்த ஆலயத்தின் எல்லா பகுதியிலும் (RC Church அல்ல)  3000 மெழுகுவர்த்தி ஏற்றி  மெழுகுவர்த்தி ஆராதனை நடக்க போவதாக Notice board ல் எழுதப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்ல அநேக கிறிஸ்தவ ஆலயங்கள் மின் ஒளியில் ஜொலிப்பதை இந்நாட்களில் காணலாம்.

தேவ ஜனமே மெழுகுவர்த்தி, Christmas star, serial lights ஒளி வீசுவதை விட நீ இந்த உலகில்ஒளி விசவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார் -  யோ 9:5 இயேசு

இதை எழுதும் போது சிறு வயதில் பள்ளியில் படித்த பாமாலை பாடல் ஞாபகத்துக்கு வருகிறது

" இயேசு கற்பித்தார்
ஒளி வீசவே
சிறு தீபம் போல
இருள் நீக்கவே
அந்தகார லோகில்
ஒளி வீசுவோம்
அங்கும் எங்கும்
பிரகாசிப்போம்"

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்
(யோ 5-35) என்று யோவானை குறித்து இயேசு சாட்சி கொடுத்தார்.

எழும்பிப் பிரகாசி -
ஏசாயா 60:1

உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
ஏசாயா 60:3

வேத வசனத்தை பிடித்து கொண்டு உலகில் சுடர்களை போல பிரகாசிக்க வேண்டும் - பிலி 2-14

வருகிற 2019 நீங்கள் ஒளி வீசும் ஆண்டாக அமைய தேவன் கிருபை செய்வாராக

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post