நம்மை உணரச்செய்யும் செய்தி :
ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளுடன் பாசத்தோடு கொஞ்சும் பெற்றோர்கள் எத்தனை !
கேள்வி 1. உங்கள் சிறு பிள்ளை தீயில் விளையாட அனுமதி வழங்குவீர்களா?
பதில் :இல்லை
ஏன்?
பதில்:என் பிள்ளையை தீ சுட்டுவிடும் !
கேள்வி 2:வீட்டு அருகில் உங்கள் பிள்ளையை பாம்பு கடித்துவிட்டது அதனால் கடித்த பகுதியை தீயினால் சிறிது சூடு போட நீங்கள் அனுமதிப்பீர்களா?
பதில் :ஆமாம்
ஏன்?
விஷம் நீங்கி என்பிள்ளை உயிரோடு இருக்குமே !
கேள்வி 3:உங்கள் சிறுபிள்ளை கத்தி எடுத்து விளையாட அனுமதிப்பீர்களா?
பதில்:இல்லை !
ஏன் ?
என் பிள்ளையை காயப்படுத்துமே
கேள்வி 4:உங்கள் பிள்ளைக்கு இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் ஆபரேஷன் செய்ய அனுமதிப்பீர்களா?
பதில் :ஆம்
ஏன்?
என்பிள்ளை உயிரோடு இருக்கவே கத்திபடவும் அனுமதிக்கிறேன்.
சரி பெற்றோர்களே உங்களை விட அதிகமாய் நேசிக்கும் பரமபிதா
நம் சுகத்தை அதிகமாக விரும்புகிறார் ஆனால் நாமோ மாயையான வாழ்கையை விரும்பி வாழ்வதை அவர் விரும்பவில்லை .அதனால் அதிகமாக சிட்சைகளைக் அனுமதித்தாவது உணரச்செய்கிறார்.
ஆனால் நாமோ அவருடைய அன்பை சந்தேகிக்கிறோம் .
பரம பிதா நமக்கு நித்தியமான அவரோடு நிரந்திரமாக உயிரோடு இருக்க நம்முடைய பாவத்தின் தண்டனையை அவரே வந்து மனித சரீரத்தில் அந்த ஆக்கினையை வாங்கினார் அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு அதிகம் .
சிலர் வருங்காலத்தில் மாயையில் சிக்கி நிரந்திரமாக மனந்திரும்ப மறுக்கும் சிலரை நல்ல நிலையிலே பரிசுத்தப்படுத்தி அவர்களை இப்பூமியில் இருந்து எடுத்துக்கொள்கிறார்.
பரம பிதாவிடம்
கேள்வி 1:சிலரை மிக கடினமாக சிட்சிக்க காரணம் என்ன?
பதில் :நான் பாவத்தை வெறுக்கிறேன் என்பிள்ளையையோ நான் நேசிகிறேன் ஆகையால் பாவத்தினை விட்டு மனந்திரும்பவே வேற வழி இல்லாமல் நான் கண்ணீரோடு என் பிள்ளையை சிட்சிக்கிறேன் .
ஏன்?
அவர்கள் பாவத்தில் இருந்து மரித்தால் நித்தியமாக என்னைவிட்டு பிரிக்கப்படுவார்களே அதனால்.
Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com
Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

Post a Comment