அந்நிய அக்கினியை ஏறெடுத்தல் (சுயவிருப்ப ஊழியம்)
நாதாபும்,அபியூவும் தேவனுக்கு முன்பாக அந்நிய அக்கினியை ஏரெடுத்தப்போது அதன் காரணமாக அவர்கள் தேவனால் பட்சிக்கப்பட்டார்கள்(லேவி10:1,2)
அந்நிய அக்கினியை ஏரெடுத்தல் என்றால் தேவனுக்காக நேரடியாக வேலை செய்யும் கோட்பாடாகும்.
எப்படியெனில் தேவன் தன்னுடைய வேலைக்கு ஒருவனை தேர்ந்தெடுக்கும்போது அவனை அதற்கு ஏற்றார்போல பக்குவப்படுத்தவேண்டும் அதாவது தகுதிப்படுத்தவேண்டும் .அதற்கு பிற்பாடே அவனை தேவன் உபயோகப்படுத்துவார்.
மோசே தன் சகோதர்கள் அடிமைப்படுத்தப்பட்டு துன்பப்படுவதைக் காண்டு மிகவும் வேதனைப்பட்டான் என்பதை நாம் அறிந்துக்கொள்ள அவன் ஒரு இஸ்ரவேலனை ஒரு எகிப்த்தியன் துன்பப்படுத்தியபோது அதைக் கண்ட மோசே எகிப்த்தியனை கொண்றுப்போட்டான் .ஆனால் அதன் நிமித்தம் அவன் தன்னை பார்வோன் கொண்றுப்போடுவானே என்று தன் உயிருக்கு பயந்து ஓடினான்.
அதே மோசே தன் சகோதரர்களை தன் புயபெலத்தாலும் சுய முயற்சியினாலும் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கக்கூடாமல் போய்விட்டது.
மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.(யாத் 2:11,12)
மோசே எப்படியாகிலும் தன் சகோதரர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்கவேண்டும் என்று நினைத்து இரவும் பகலும் அழுதிருப்பார்.
ஆனால் இஸ்ரவேலரோ மோசேக்கு செவிக்கொடுக்க மனதில்லாதவர்களாக காணப்பட்டார்கள். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவன் அநியாயஞ்செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.(எபிரே11:24-26)
அவர் தன் சகோதரர்கள் படும் துன்பங்களைக்கண்டு இருதயத்தில் தாங்கொன்னா துன்பத்தை ஒவ்வொரு நேரமும் அனுபவித்திருப்பார்
இந்த வேதப்பகுதியை நான் வாசிக்கும்போது அதை ஆவியில் உணர்கிறேன்.அரண்மனை சுகங்கள் அவருக்கு வெறுப்பாகவும்,அதன் போஜனங்கள் அவருடைய இருதயத்துக்கு கசப்பானவும் இருந்திருக்கும்.
தன் சகோதரர்கள் அடியும்,மிதியும் பட்டு இரவில் தூக்கமில்லாது புலம்புவதை இவர் தூங்குகயில் அதை உணர்ந்து புலம்பியிருப்பார்,அவர் என் சகோதரர்களை எப்படியாகிலும் விடுவிக்கனுமே என்று ஓயாமல் அதையே சிந்தித்துக்கொண்டிருந்திருப்பார்.அதன் விளைவே தன் சகோதரனை ஒரு எகிப்த்தியன் இரக்கமில்லாது அடிக்கிறதைக் கண்டு அவர் உள்ளம் துடித்து மாம்சத்தில் வெறிகொண்டு சுயநீதியை எடுத்துக்கொண்டு அந்த எகிப்தியனைக்கொண்றுப்போட்டிருப்பார்.
இதேபோலத்தான் இன்று நம்மில் சிலர் சுயநீதியைக்கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவர்களை கொலை செய்பவர்களைப்பற்றி சிந்திக்கும்போது அவர்களை பழிவாங்க நம்மில் சுயநீதி உண்டாகி நம் மாம்சம் வெற்கொள்கிறது .ஆனால் உலகத்திற்கு பயந்து நாம் நம்மை அடக்கிக்கொள்கிறோமே தவிர தேவனுக்கு பயந்து அல்ல! இதுதான் அந்நிய அக்கினியின் செயலைப்போன்றதே!நம் சுயபெலத்தால் எதையும் சாதிக்கமுடியாது என்பதற்கு அன்று மோசே தன் சகோதரனை காப்பாற்ற எகிப்தியனைக் கொன்றுப்போட்டது ஒருஎடுத்துக்காட்டு.
தன் சகோதரர்களை விடுவிக்க நினைத்த மோசே வணாந்திரத்தில் பக்குவப்படவேண்டியதாயிருந்தது. கோபம் கொள்ளும் மோசேயை சாந்தகுணமுள்ளவனாக மாற்றவும் பொறுமையுள்ளவனாக இருக்கவும் அவன் உத்தமமாக இருக்கவும் வேண்டியது அவசியம் ஆகையால் மேசேயை தேவன் வனாந்திரத்தில் ஆடுமேய்க்க வைத்து நல்ல சுபாவத்தை அவர் அடையும் வரை அநேக பாடுகளை சந்திக்க வைத்து காத்திருக்கச்செய்து தகுதிப்படுத்தியப்பின்பு அந்த மோசேயைக்கொண்டு இஸ்ரவேலர்களை விடுவிக்க தேவன் சித்தங்கொண்டார் உடனே அவனை பார்வோனிடத்தில் அனுப்பவில்லை!
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்
முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார்.
அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்
இந்த பதிலை மோசேயுடன் தேவன் கூறவேண்டுமானால் மோசே இரவும் பகலும் வனாந்திரத்தில் தன் சகோதரர்களுக்காக தேவனிடத்தில் கதறி ஜெபித்திருக்கக்கூடும்.
ஆகையால் தேவன் ஒரு மனிதனைப் பயன்படுத்த அவன் ஜெபித்து அதிக காலம் காத்திருக்கிறவனாக பயிற்ச்சி இருக்கவேண்டும்.விசுவாசபரிட்சையில் நில்லாதவர்களைக்கொண்டு தேவன் ஒருபோதும் தம்முடையக்காரியத்திற்கு பயண்டுத்தமாட்டார்.
இன்று உணர்ச்சியின் மூலமாக மிஸ்னரியாக வடமாநிலத்துக்கு செல்பவர்கள் போன வேகத்திலே அங்கு என்னால் வாழமுடியாது என்று திரும்பிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் ஊழியத்தில் மேன்மையையும்,புகழையும் விரும்புவதால் அடங்காதவர்களாக எல்லோருக்கும் எதிர்த்து முறுமுறுக்கிறவர்களாக காணப்படுகின்றனர்.
பக்குவப்படாமல் தலமைப்பொறுப்பில் இருப்போர் அநேக விசுவாச வீரர்களுக்கு தடையாக இருந்து அவர்களை வஞ்சிக்கிறவர்களாக இருக்கின்றனர்.தேவனுக்கு கீழ்படிய அவர்களை விடாமல் ”தேவன் உனக்கு சொன்னாரா? போய் நல்லா உபவாசித்து நடத்திப்புக்கு கீழ்படிந்து அடங்கியிருக்க கற்றுக்கொள் என்று பார்வோனைப்போல தடை செய்கிறவர்களாக காணப்படுகிறார்கள்.
தன் குட்டி சாம்ராஜியத்திற்கு உதவியாக இருக்கும் இவனை எப்படி விடுவது என்ற வஞ்சக எண்ணங்களே அதற்கு காரணம் .ஆனாலும் அந்த தடைகளும் விசுவாச வீரர்களின் ஆவிக்குரிய தரத்தை மேன்மைப்படுத்த கருவியாக மாறிவிடுகிறது.தேவனுக்கு கீழ்படிகிறவர்கள் மனுசர்களுக்கு அடிமையாகமாட்டார்கள் என்பதை விளக்கும்வண்ணமாக தேவன் விசுவாச வீரர்களுடன் இருப்பதைக் கண்டு பக்குவப்படாத தலைவர்கள் தன்னை விட்டு இவன் போவதே நல்லது என்பதை உணரும்படி தேவன் கிரியைகளை நடப்பிப்பார்.
மற்றும் சிலரோ நல்ல விசுவாச தலைமைக்கு கட்டுப்படாமல் தானாகவே பேர் பிரஸ்தாபத்துக்காக பெருமையுடன் கீழ்படியாமல் பிரிந்துப்போய் அவர்கள் முன்பு இருந்த தலமையை குற்றப்படுத்தி பிறரிடம் முறையிட்டு அனுதாபங்களை பெற்றுக்கொள்ளும்படியான செயலில் இறங்கி ஊழியத்தில் வளர்ச்சி இல்லாமல் இவரும் ஒரு குட்டி சாம்ராஜியத்தை உண்டாக்கவே முற்படுவார்.
சகோதரர்களே இப்படிப்பட்ட பக்குவப்படாமல் ஊழியம் செய்வதே அந்நிய அக்கினியை கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்வதுப்போன்றதே!?
தேவன் இதை வெறுக்கிறார்.ஒரு மனிதனைக்குறித்து தேவனுக்கு ஒரு திட்டம் இருக்கும் அந்த மனிதனோ தன் சுய விருப்பப்படி தனக்கென்று ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டு நன்மை செய்தாலும் அவை தேவனுடையப்பார்வையில் அருவருப்பே! அது அந்நிய அக்கினியை ஏறெடுப்பதாகும்.
பழைய ஏற்பாட்டு காலங்களில் பலி செலுத்தும் முன்பு பலிகள் தீயினால் சுட்டெரித்தப்பின்பே தேவன் சுகந்த வாசனையாக ஏற்றுக்கொள்வார்.பச்சையாக இருப்பதை விரும்பமாட்டார்.பச்சையாக இருக்கும் அனுபவம் கோபம்,பெருமை,தற்புகழ்,வைராக்கியம் ,பொறாமை ,பொய் ,மாய்மாலம் இப்படிப்பட்டதான மாம்ச குணங்களுடன் சுயத்த்தின்படி வாழ்ந்துக்கொண்டு தேவ ஊழியம் செய்யும் அனைத்தும் அந்நிய அக்கினியை ஏறெடுப்பதே!
ஏழைகள் மத்தியில் ஊழியம் செய்யும் முன்பு பசி என்பதும்,பட்டினி என்னவென்பதும் அறிய தேவன் நமக்கு அநேக பாடுகளை அனுபவிக்க வனாந்திரத்தைப்போல ஒரு வாழ்கையை முதலில் அனுமதித்து உண்மையாகவே அப்போதும் ஏழைகளுக்காக பரிந்துப்பேசி ஜெபித்து காத்திருக்கும்போது ஏழைகள் மத்தியில் ஊழியம் செய்ய தேவன் அனுப்புவார் அதற்காக சிலர் இப்படியாக எண்ணக்கூடாது தேவன் பணக்காரர்களுக்கு ஊழியம் செய்ய என்னை பனக்காரனாக்குகிறார் என்று .தரித்திரருக்கு சுவிஷேசம் அறிவிக்கவேண்டும் என்ற தீர்க்கதரிசனத்தின்படியே இயேசுகிறிஸ்து ஏழைக்கோலம் எடுத்து அநேக பாடுகள் வழியாக செல்லவேண்டியதாக இருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com
Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

Post a Comment