இன்றய கிறிஸ்தவ மனநிலை:- நடுநிலையுடன் ஆராய்வோம்.

இன்றய கிறிஸ்தவ மனநிலை:- நடுநிலையுடன் ஆராய்வோம்.

1.பண ஆசையுடன் தேவனிடத்தில் முறையிடும் விசுவாசி!
காரணம் இந்த உலகத்தில் ஐசுவரியமாக வாழவேண்டும்.அவர்கள் சாட்சியாக நிறுத்துவது ஆபிரகாம்.

2.பண ஆசையில் இருக்கும் ஊழியக்காரன்.
அதை நோக்கமாக செழிப்பின் உபதேசத்தை வலியுறுத்தி பேசுவது.

3. பணத்தை விரும்பினாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமுடியாமல் யாரிடம் பணம் இருக்கிறதோ அதை சுட்டிக்காட்டி சத்தியத்துக்காக வாழ்வதுப்போல தன்னைக் காட்டிக்கொள்ள மற்ற ஊழியக்காரணை வசைபாடும் விசுவாசியும்,ஊழியர்களும் ஏறாளம்.

4.உண்மையாக ஊழியம் செய்ய நினைத்து உலக சுகவாழ்வை வெறுத்து அன்றாட வாழ்வில் கூட மனிதர்களின் விருப்பத்தைக் கூட நிறைவேற்றாமல் பிரதிஸ்டையுடன் வாழும் சில ஊழியர்கள்.

5.தான் பிரதிஸ்டையுள்ளவன் ஆனால் தன் குழந்தைகள் விருப்பத்தை எப்படி சமாளிப்பது என்றுத் தெரியாமல் தடுமாறும் ஊழியர்கள் சிலர் உண்டு.
இதை ஆராய்ந்தேன்.

உலக ஐசுவரியத்தில் குறைவில் இருப்பவன் நிறைவில் இருப்பவனை குற்றப்படுத்துகிறான்.

நிறைவில் இருப்பவன் குறைவில் இருப்பவனை எப்படியாவது இவனை பேசாமல் இருக்க வைக்கவேண்டும் என்று நினைக்கிறான்.

ஆனால் பாதிக்கப்படுவதோ இந்த இருவர்கள்தான்.

தேவனுக்காக வாழ்பவர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்யும்போது யாரைக்குறித்தும் பயப்படுவதில்லை,பிறர் என்ன நினைப்பார்கள் என்று வாழமாட்டார்கள்.தேவனுடைய விருப்பம் எது என்பதாக வாழ்வார்கள்.
எல்லோருக்கும்..

யாரையும் விமர்சிக்கப் பழகின விசுவாசியைப் பார்த்து கேள்வி!
நீ கார் வைத்திருக்கும்போது ஊழியக்காரன் கார் வைக்கக்கூடாதா?

நீ வீட்டில் ஏசி வைக்கும்போது ஊழியக்காரன் ஏசி வைக்கக்கூடாதா?

நீ சொந்த வீட்டில் இருக்கும்போது ஊழியக்காரன் சொந்த வீட்டில் இருக்கக்கூடாதா?

விசுவாசியின் வாயை அடைக்கப் பார்க்கும் ஊழியனைப் பார்த்து கேள்வி!
நீ உன் பண ஆசைக்காக நயவசனிப்பாக பேசி விசுவாசியை சீஷனாக்காமல் இவ் வுலகத்தானாக்கலாமா?

நீ தேவனுடைய காணிக்கையை உனக்கே எடுத்துக்கொண்டு விசுவாசிகளை நடத்தும் சுதந்திரத்தை இறுமாப்பாக ஆளலாமா?

இன்று உண்மையான ஊழியர்கள் தங்கள் அன்றாட பணிக்கு தேவையான மோட்டார் சைக்கிள் கூட வாங்க யோசிக்கிறார்கள்.காரணம் சில பேயாளி மக்கள் வசைபாடுவார்களே என்பதால்..

ஒரு ஊழியர் என்னிடம் வெயில் உக்கிரகமாக இருக்கிறது என்றுக்கூறி ஏதாவது கூலர் வாங்க வேண்டும் என்று என்னை அனுகினார் நான் அவர் வீட்டுக்கு சென்றேன்.

அவர்கள் குழந்தைகள்.அப்பா ஏசி வேனும் என்றார்கள்.ஊழியரோ குழந்தைகளை அதட்டினார்.
என் மனதில் ..

நாம் ஏசி வைத்துள்ளோம் நான் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம்(தேவையான நேரம் மாத்திரம் உபயோகப்படுத்துவது மஅதாவது மே மாதம் மட்டுமே காரணம் கரண்ட் பில் எகிறும் என்பதால்...)
என் குழந்தைகள் எவ்வாறு ஆசைப்பட்டது என்பதை நினைத்து அந்த நாளில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப்ப நான் நடந்துக்கொண்டேனே ஆனால்..இவர் ஏன் ஏசி வாங்கக்கூடாது
அவர் தன் மனதில் எதை யோசிக்கிறார் .

 கடைக்காரர் கூலரைப் பற்றி ஒவ்வொன்றாக விலை கூறுகிறார்.

ஊழியரோ கூலரிலும் குறைந்த விலை எது என்பதை நோக்கியே அவரது பேச்சு இருந்தது..

நான் ஊழியரை தடுத்து நீங்கள் ஏசி வாங்குங்கள் கோடைக்காலம் மாத்திரம் உபயோகப்படுத்துங்கள் என்றேன்.
அவர் வேண்டாம்....என்று சொல்ல....
நான் யூகித்தேன் ஏன் வேண்டாம் என்கிறார்..

ஆலய தேவை பற்றி பேச அவர் வாய் தடுமாறும்.அதை அநேக நேரம் பார்த்திருக்கிறேன்.
இவர் எதற்க்காக வேண்டாம் என்றார்...என்பதை புரிந்துக்கொண்டேன்.

விசுவாசிகள் தூற்றுவார்கள்,என்ற காரணமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு விடாமல் நான் கடைக்காரரிடம் ஏசி தாருங்கள் என்றுக் கூறி கடைசியாக புக் செய்துவிட்டேன்.

ஊழியரோ மிகவும் வேதனைப்பட்டதை அறியமுடிந்தது.
வீட்டில் ஏசி மாட்டியவுடன் அவர்குழந்தைகளுக்கு மிக சந்தோசம் ஆனால் ஊழியர் முகம் இறுக்கமாக இருந்ததைப் பார்த்தேன்.அவர் தன் குழந்தைகள் மேல் எரிச்சல் உள்ளவரானார்.

நான் வீடு திரும்பினேன்
பல சிந்தனைகள் எனக்குள் ஓடியது....
இந்த உலகம் ஒரு மாயை இங்கு நாம் நிரந்தமாக இருப்பதில்லை!
உலகத்தில் வனந்தர வாழ்கை வாழும் சூழலில் வாழவேண்டும் அதே நேரத்தில் சோலைவணம் வரும் சூழலில் அதிலும் வாழவேண்டும் ஆனால் நோக்கம் நாம் பரலோக பயனிகள் நாம் நிரந்தர வீட்டுக்கு போகனும் இவ்வுலகத்தின் மேல் பற்றுதல் இருக்கக்கூடாது...என்பதாக.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post