தேவன் ஏன் தாமதம் செய்கிறார்

தேவன் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவே தாமதம் செய்கிறார்.அவர் வேண்டுமானால் எப்போதே உலகத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பார் ஆனால் எந்த மனிதனையும் அவர் இழக்க விரும்பாமல் எல்லோரும் மனந்திரும்பவேண்டும் என்றே தாமதிக்கிறார்.

அவர் அன்பை புரிந்துக்கொள்ளாமல் மனிதர்களோ இன்னும் சமயம் இருக்கிறது என்று மேலும் கேடானவர்களாக காணப்படுகின்றனர்.
ஆனால் இதை அறியாமல் தேவன் இல்லை எல்லாம் அறிந்த தேவன் நம் மேல் வைத்த அன்பின் நிமித்தம் நம் அனைவரின் மனந்திரும்புதலுக்காக காத்திருக்கிறார்.

அவருக்குத் தெரியும் ஆத்துமா நரகத்தில் துன்பப்படுவது என்பது எவ்வளவு வேதனை என்பது.ஆதலால் அவர் பொறுமைக்காக்கிறார்.இதை அறியாத மனிதனோ அகங்காரத்தில் உலகத்தில் உலாவருகிறான் ,கடைசியாக தன் பாவத்துக்கு ஒத்த தண்டனை உடனே கிடைக்காததால் தேவனே இல்லை!
 என்று அகமகிழ்கிறான் .

இப்படிப்பட்ட ஆனவத்தைக் கண்டும் தேவன் பொறுமையாக இருப்பது தேவன் எவ்வளவு தயை உள்ளவர் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதை காட்டுகிறது.

தேவன் சகலத்தையும் தம்முடையவர்கள் அனைவரையும்மீட்பார் அந்த நாள் வர நாம் ஜெபிப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post