ஒரு மனிதனுடைய வலியை இன்னொரு மனிதன் தன் இருதயத்தில் உணர்ந்து வியாகுலப்படுவதே இரக்கம்.
அந்த இரக்கத்தைத்தான் ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமப்பதான கிறிஸ்துவின் பிரமானத்துக்கு முன்னோடி.
இரக்கம் கிரியையில் முடிவதே கருணை ஆகும்.
அந்த கருனையினால் நமக்கு பாதிப்பு உண்டாகுவதே தியாகம்.
தன் உயிரையே தியாகமாக கொடுத்து நம்மை மீட்கவேண்டும் என்றால்....நம்முடைய முடிவு எவ்வளவு கொடூரமாக இருந்திருந்தால் தேவனே தன் ஜீவனைக் கொடுக்க முன்வந்திருக்கவேண்டும்.
தான் உண்டாக்கின ஒரு சிருஷ்டிக்கு இவ்வளவு அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை ஆனால் அன்பு செலுத்த ஜீவனையே கொடுப்பார் என்றால்...நாம் அவருக்கு அதிமுக்கியமானவர்களே!
நம்மை இழக்க அவர் விரும்புவதில்லை!
Post a Comment