நித்திய ராஜியத்தில் பங்குள்ளவனாக காணப்பட மனந்திரும்பு

நீ செய்யும் ஒவ்வொரு கரரியத்திலும் உன் முடிவைக் கவனி. எல்லா இரகசியங்களையும் அறிந்தவரும், பரிதானம் வாங்காதவரும், சாக்குப் போக்குகளை அங்கீகரிக்காதவரும், நீதி தவறாது எல்லாவற்றிலும் நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருமான ஒரு கண்டிப்பான நியாதிபதிக்கு முன் நிற்கவேண்டுமென்பதை உன் ஞாபகத்திலிருக்கட்டும்.

பரிதபிக்கத்தக்க, புத்தியீனனான பாவியே, அற்ப மனிதன் கோபித்துக் கொள்ளுகிறபோது அவனுக்குப் பயப்படுகிற நீ, உன் அக்கிரமங்களை ' ' எல்லாம் அறிந்த சர்வ வல்ல தேவனுக்கு முன் என்ன பதில் சொல்லுவாய்? ஓருவனுக்காக இன்னொருவன் பாதுகாப்பளிக்கும் நிலையில் இல்லாத போது, எதிர் நியாயங் கூறவும் முடியாமல், அவனவன் தன் தன் பாட்டைக்கவனிப்பதே பெரும்பாடாக இருக்கும் அந்தக் கடைசி நியாயத்தீர்ப்பு நாளுக் கென்று நீ எவ்வித ஆயத்தமும் செய்துகொள்ளாமலிருக்கிறகிதன்ன?
அதற்கென்று நீ இப்போது படுகிற பிரயாசம் பலன்தரும், உன் கண்ணீர் அங்கீகரிக்கப்படும், உன் பெருமூச்சுகள் கேட்கப்ப்டும், உன் துக்கம் உன்னை 'திருப்தியாக்கும்; உன் பாவங்கள் நீங்கிச் சுத்திகரிப்படையவும் இடமுண்டு.

நம்முடைய பாவங்களையும் துர்க்குணங்களையும் கடைசிக்காலம் _ வரைக்கும் சேமித்து வைக்கிறதைப் பார்க்கிலும் இப்பொழுதே அவைகளை நம்மைவிட்டு வேறுபடுத்தி நம்மைக் கழுவிச் சுத்திகரித்துக் கொள்ளுவது உத்தமம். நம்முடைய மாம்சத்தை நாம் அளவுக்கு மிஞ்சி நேசிக்கிற தினாலயே நாம் மோசம் போகிறோம்.

அவியாத அந்த நகர அக்கினிக்கு உன் பாவங்களே "தவிர வேறொரு இரைஏது? எவ்வளவுக்கதிகமாய் நீ உன் சொகுசை விரும்பி, உன் மாம்ச இச்சை களைப் பின்பற்றி வருகிறாயோ அவ்வளவுக்கதிகமாய் உனக்குக் அதிககொடிய வேதனைகள் ஏற்படும், அக்கினிக்கு நீ அளிக்கிற இரையும் அதிகமாகும்.

உலகம் அதில் உள்ள அனைத்து சுகங்களும் மாயைக்குள் இருக்கிறது மனுசனுடைய வாழ்வு ஒரு புகையைப்போல ஒழிந்துப்போகக்கூடியவை!
மனுபுத்திரர்கள் அனைவரும் மாயைக்குள் தங்கள் நினைவுகளை நிலைநிறுத்தி அவற்றின் செயலில் தங்கள் இருதயத்தை வைத்திருப்பதால் தேவனுடைய மகிமையின் ஒளியைப்பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை!

எல்லோரும் ஏகமாக கெட்டழிந்துப்போகிறார்கள் தங்கள் பொல்லாத கிரியைகளைக் குறித்து மேன்மைப்பாராட்டி பிறனுடன் சாட்சிபகிர்ந்து மகிழ்கிறார்கள்.
பாவத்தின் சிற்றின்பத்திற்காக திட்டங்கள் தீட்டி தங்கள் ஆத்துமாக்களை கெடுத்துப்போட அவர்கள் இருதயம் வெறிகொண்டிருக்கிறது.

தேவமனுசனே இனிவரும் காலம் கொடியதாக இருப்பதால் பாவத்தின் வஞ்சனையில் இழுப்புண்டு உன்னை அடிமையாக ஒப்புக்கொடாமல் நித்தியத்தின் சத்திய ஒளியை விரும்பி இருளின் துர்கிரியைகளை இணங்கண்டு அவற்றைவிட்டு விலகு!
உன் வாஞ்சை விருப்பம் உலகத்தின் ஞானத்தில் நிறைந்திருந்து இவ்வுலகத்தில் சுகபோகமாக வாழும் நிலையை சிந்தித்துக்கொண்டு கிரியை செய்யும் அனைத்தும் வீனானவை என்று ஒருநாள் உன்னை உணர்த்தும் அந்தநாள் உனக்கு உலகத்தின் முடிவாகக்கூட இருக்கலாம்.

மனந்திரும்பு நித்திய ராஜியத்தில் பங்குள்ளவனாக காணப்பட உலகத்தின் அனைத்தையும் நிரந்திரமல்லாதவை என அறிந்து நிலையான ஜீவியத்திற்கு ஏதுவாக உன் ஜீவியம் பிரகாசிக்க கிருபைக்கு கீழ்படிந்து அர்ப்பணித்திடு!!
கர்த்தர் நல்லவர்
கர்த்தர் உன்னை காக்ககடவர்!
கர்த்தர் உன்னை மாயைக்கு விலக்கி சத்தியத்தின் ஒளிக்குள் நிலைநிறுத்தச்செய்வாராக!
ஆமேன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post