தேவகிருபைக்கும் கிரியைக்கும் வித்தியாசம்

தேவகிருபைக்கும் கிரியைக்கும் வித்தியாசம்.

தேவகிருபை ஒருவனில் கிரியை செய்யும்போது,பரிசுத்தமாக வாழ தூண்டப்படுகிறான்,தன்னைத் தாழ்த்துகிறான்,தேவனுக்கு மகிமைக்கொண்டுவருகிறான்,பாவத்தின் மேல் வெறுப்பும் அதை செய்ய மனதில்லாதவனாக இருக்கிறான்.

இச்சை அவனை இழுப்பதுப்போல இருக்கும்போது அதை அசட்டை செய்து அதன் வலிமையை செயல் இழக்கச்செய்கிறான் .

பாடுபடுதல்,உபத்திரவத்தில் உள்ளான மனதில் களிகூறுதல் இவை கிருபையின் அடையாளம்.

சுயகிரியை என்பது வேதத்தின்படி வாழும்படி தன்னையே அதற்கு தகுதிப்படுத்த தன் முழுபலத்தையும் கொடுத்து ,நல்லது எது தீமை எது என்று வகையறுத்து நடக்கிறான் .

இச்சை அவனை இழுக்கும்போது அதை விரும்புகிறான் ஆனால் அதை செய்யக்கூடாது என்ற மனதின் பிரமாணத்தில் அதை அடக்கிக்கொண்டுப் போகிறான் ஒரு நாள் அவை சேர்ந்து அதிகமானப்பிற்பாடு அதே இச்சை அவனை நிலைகுலயச்செய்கிறது.தன் மனதில் தோல்வியை அடைகிறான் .

வெளியில் அவை தெரியவில்லை அதனால் நீதிமான்போல வேசமாக இருக்கிறான்.

இவையே சுய கட்டுப்பாடு
கிருபையானது இருதயத்தின் நினைவுகளில் ஜெயத்தையும்,கிரியை(சுயகிரியை)யானது இருதயத்தின் நினைவுகளில் தொல்வியை உடையது.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post